என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரத்தை கையில் எடுத்துள்ளது
- நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
சிறப்பு அந்தஸ்து ரத்து
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
இது காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையைத் துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததையும் பார்க்க வேண்டி உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீருக்கு முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அரசியல் களம்
இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கம் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை, பிரதான விஷயமாக கையில் எடுத்துள்ளது.
தீர்மானம்
தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லா பேசுகையில், தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களவை தேர்தலுடன்,சட்டசபைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
- மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டமன்ற இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "இன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டதற்கு நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக, ஆகஸ்ட் 20 முதல் 25-ந்தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய அரசின் ஆட்சி அகற்றப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்போது ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை சேர்த்து நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். அவர்கள் சில மாநில தேர்தல்களை சேர்த்து நடத்தினார்கள். எனினும் இங்கே தேர்தல் நடத்தவில்லை. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.
தேர்தல் களம் ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மற்ற கட்சிகளை விட அதற்கு அனைத்து வகையான பாதுகாப்பும் உள்ளது. இது நடக்கக் கூடாது, நாங்கள் விரும்பும் சமநிலையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்" என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
- சுட்டுக்கொன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
- அமர்நாத் பனிலிங்கத்தை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்
ஸ்ரீநகர்:
அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 29-ம் தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாத யாத்திரை செல்கிறார்கள்.
வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
- இதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராணுவ சிறப்பு படைப்பிரிவினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்றும், 3 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அடித்தளம் மக்கள் மற்றும் நிர்வாகத்தால் போடப்பட்டது.
- தற்போது வலுவான கட்டடம் கட்டுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
vஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது பயங்கரவாத தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் என்கவுண்டர் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் கூறியதாவது:-
அடித்தளம் மக்கள் மற்றும் நிர்வாகத்தால் போடப்பட்டுள்ளது. தற்போது வலுவான கட்டடம் கட்டுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. நாம் புதிய உச்சத்தை எட்டுவோம். அதற்கான நேரம் இது. ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தலையிட முடியும், சீர்குலைக்க முடியும் என எந்த உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகள் நினைத்தாலும், அது அவர்களின் தவறு. சீர்குலைக்கும் சக்திகளுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
தேர்தலை சீர்குலைக்க எதற்கும் இடமளிக்கப்படமாட்டோம் என்பதில் முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அதை செய்யாவிட்டால், அது கோழி- முட்டை நிலை (கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?) ஆகிவிடும். நாம் தேர்தலை பற்றி பேசும்போதெல்லாம், இதுபோன்ற செயல்கள் அதிகரிக்கும். நாம் வலுக்கட்டாயமாக பின்நோக்கி செல்ல வேண்டியிருக்கும். இது சண்டையிடாமல் தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும். இது நடக்காது.
தேர்தலை இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்காது. நமது படைகள், நிர்வாகம் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது, ஜனநாயக கொடி பறந்து கொண்டிருக்கிறது. பறந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்தார்.
செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மோசமடைந்தது.
- இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ம் ஆண்டு அகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கியது.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு 4 வருடங்கள் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் முக்கியமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது நாட்டிற்கு வரலாறு கிடையாது. அது அவர்களுடைய கட்சியின் வரலாறு. நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் இந்து இந்தியாவை விரும்பினார்கள். ஆனால் நேரு, பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அந்த நேரத்தில் அதற்கு முடியாது எனத் தெரிவித்தார்கள்.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை நம்பும் மதசார்பற்ற நாடு. காஷ்மீர்- தமிழ்நாடு அல்லது அசாம் அல்லது மகாராஷ்டிரா இடையிலான பொதுவானது என்ன? நாம் மற்றவர்கள் மொழியை கூட பேசவில்லை. ஒரே மாதிரியான கலாசார விசங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. நம்முடைய உணவு பழக்க வழக்கம் மாறுபட்டவை. மதம், ஜாதி, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பிரகாசமான, வலிமையான இந்தியாவைக் கொண்டுவருவதற்கு ஒன்றிணைக்கிறது.
பாகிஸ்தான் முஸ்லிம் நாடானது. நாம் அவ்வாறு இல்லை. நாம் பல மதங்கள் கொண்ட நாடு. பன்மொழி நாடு, அப்படியே இருப்போம்.
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொடு ஆண்டும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும்.
- அமர்நாத் யாத்திரையில் இதுவரை 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அங்கு ஒவ்வொரு ஆண்டும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும். அதைக் காண லட்சக்கணக்கானோர் புனித யாத்திரை செல்வார்கள்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 19-ம் தேதி யாத்திரை முடிவடைகிறது. பக்தர்கள் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமர்நாத் பனிலிங்கத்தை இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என அமர்நாத் ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதம் அதிகரித்து வருவதில் எந்த சந்தேகம் இல்லை.
- மிகவும் பயிற்சி பெற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு, கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் அடிக்கடி கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி வருகிறார்கள். நன்கு பயிற்சி பெற்றவர்கள் எல்லை வழியாக ஊடுருவி ஜம்மு-காஷ்மீரில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வந்த போதிலும் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதனால் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேசிய மாநாடு கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:-
பயங்கரவாதிகள் ஊடுருவல் சம்பவம் தொடர்ந்து நீடித்தால் இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியாத காலம் வரும். பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுகக் வேண்டும். பயங்கரவாதம் அதிகரித்து வருவதில் எந்த சந்தேகம் இல்லை. மிகவும் பயிற்சி பெற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாடுகளுக்கு இடையில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். தற்போதைய சூழ்நிலை எங்களுக்கான எச்சரிக்கை மற்றும் அபாயகரமானது.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தகவல்.
- உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், " ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்த டாடா சுமோ டக்சம் அருகே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது".
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
- தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநில மலைப்பகுதியில் நவீன ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். குப்வாரா மாவட்டம் காம்காரி பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்திய ராணுவ ஜவான் வீர மரணமடைந்தார்.
ராணுவ மேஜர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
- கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.
- வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டமானது 4.1 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த பின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.
* கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
* தேசத்திற்காக செய்த தியாகங்கள் நிலையானவை என்பதை கார்கில் போர் வெற்றி தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
* இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் எவர் ஒருவர் நம் நாட்டை அணுகினாலும் அடக்கி ஒடுக்கப்படுவர்.
* வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
* மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.
* அனைத்து விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம்.
* பயங்கரவாதிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று பாகிஸ்தானை பிரதமர் மோடி எச்சரித்தார்.
#WATCH | Ladakh: PM Narendra Modi says, "Pakistan has failed in all its nefarious attempts in the past. But Pakistan has not learned anything from its history. It is trying to keep itself relevant with the help of terrorism and proxy war. Today I am speaking from a place where… pic.twitter.com/HQbzjcVKVq
— ANI (@ANI) July 26, 2024