search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமர்நாத் பனிலிங்க தரிசனம்: 5 லட்சத்தைக் கடந்த பக்தர்கள் எண்ணிக்கை
    X

    அமர்நாத் பனிலிங்க தரிசனம்: 5 லட்சத்தைக் கடந்த பக்தர்கள் எண்ணிக்கை

    • ஒவ்வொடு ஆண்டும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும்.
    • அமர்நாத் யாத்திரையில் இதுவரை 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    அங்கு ஒவ்வொரு ஆண்டும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும். அதைக் காண லட்சக்கணக்கானோர் புனித யாத்திரை செல்வார்கள்.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 19-ம் தேதி யாத்திரை முடிவடைகிறது. பக்தர்கள் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமர்நாத் பனிலிங்கத்தை இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என அமர்நாத் ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×