search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி இன்று காலை கார்கில் சென்றார்.
    • கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

    இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

    கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை பிரதமர் மோடி கார்கில் சென்றார்.

    கார்கில் போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

    • காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது.
    • ஆண்டுதோறும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும்.

    ஜம்மு:

    காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதில், ஆண்டுதோறும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும். அதைக்காண லட்சக்கணக்கானோர் புனித யாத்திரையாக செல்வார்கள்.

    இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆறு வாரங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • சர்வதேச எல்லையில் சுரங்கம் அமைத்து இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக தகவல்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக துப்பாக்கிச் சண்டை அதிகரித்த வண்ணம் உள்ளது. பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக கூடுதல் பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவுவது பெரும் தலைவலியாக இருக்கிறது. இதனால் சம்பா செக்டாரில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய சுரங்கங்கள் உள்ளனவா? என பாதுகாப்புப்படையினர் கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அடர்ந்த புதர்கள் மற்றும் வனப்பகுதிகளில் கவனம் செலுத்தி ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் எல்லைப் பகுதிகளை உன்னிப்பாக ஸ்கேன் செய்து வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைக்காக டிரோன்களும் குவிக்கப்பட்டுள்ளன.

    சுரங்கங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களில் அடர்ந்த புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சர்வதேச எல்லை வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவுகிறார்கள். ஊடுருவும் அவர்கள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

    கடந்த சில மாதங்களில் 50 முதல் 60 பேர் எல்லை வழியாக ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியிருக்கலாம் என கூறப்படுகின்றன.

    கடந்த ஆறு வாரங்களாக பயங்கரவாதிகள் கத்துவா, தோடா, ரஜோரி, பூஞ்ச், ரியாசி மாவட்டங்களில் ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புப்படையினர், பொதுமக்கள், யாத்ரீகர்கள் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் மாலை 5.34 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

    அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி, நிலநடுக்கம் மாலை 5.34 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியானது.

    • எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

    தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.
    • ஜம்மு பகுதியில் கடந்த 32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    தோடாவின் தேசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையே நேற்றிரவு முதல் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.

    பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் தொடங்கிய பயங்கரவாத தாக்குதல்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயங்கரவாதம் இல்லாத பகுதியான ஜம்மு முழுவதும் தற்போது பரவியுள்ளது.

    ஜம்மு பகுதியில் கடந்த 32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.
    • எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் அறிந்து இந்திய ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் பயங்கரவாதிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அதி நவீன வசதி கொண்ட ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.

    அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு ஜம்மு காஷ்மீர் ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளது.

    இதேபோல் எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது. இதனையும் அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    • பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர்.
    • பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மேலும், பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது.
    • எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது

    ஜம்மு காஷீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து  ஜம்மு காஷ்மீர் பகுதிகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக கடந்த 2019 ஆம் ஆண்டு கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பிரித்தது. இதற்காக பிரத்தேயகமாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.

    இந்நிலையில் வரும் செப்டெம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது  சர்ச்சையாகியுள்ளது.

     

     

    இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரங்கள்  வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலத்தின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் நீதித்துறை, காவல்துறை, அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடம்மாற்றுதல் உள்ளிட்டவற்றில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள்ளன.

    இந்த துறைகளில் அதிகாரிகளை நியமிப்பதற்கு ஆளுநரின் ஒப்புதல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அதிகாரிங்கள் ஜூலை 12 முதல் நடைப்முறைக்கு வந்துள்ளன.  

    • ஜம்மு காஷ்மீரில் இரட்டை குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டன.
    • குழந்தைகளின் தந்தையை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் கழுத்து அறுக்கப்பட்ட உடல்கள் ஒரு வீட்டில் இருந்துமீட்கப்பட்டன. தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, குழந்தைகளின் தந்தையை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சஜ்லா-கேயானி கிராமத்தில் முகமது குர்ஷித் வீட்டில் இரட்டை பெண் குழந்தைகளின் உடல்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. இருவரது உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இரட்டைக் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

    விசாரணையில், வெளியூரில் வேலை செய்யும் கணவன் மூன்று மாதத்துக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளான். இரட்டை பெண் குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை எனவும், கள்ளத்தொடர்பால் குழந்தைகள் பிறந்தது என கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், மன வேதனையில் இரட்டை குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனக்கு பிறக்கவில்லை என தந்தை கூறியதால் மனவேதனை அடைந்த தாய் இரட்டை பெண் குழந்தைகளைகொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜம்மு, லடாக் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • மேலும் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

    10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஜம்மு, லடாக் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    கடந்த புதன்கிழமை அன்று காலை 7.14 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது

    • இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை.
    • போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு.

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    இதில் புதிதாக என்ன இருக்கிறது? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை, போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை.

    இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது நம் நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, நல்லுறவு ஏற்பட வேண்டுமானால் பாகிஸ்தானின் பொறுப்பும் கூட என்று நான் இப்போதும் கூறி வருகிறேன்.

    இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக்கூடாது, அப்படியொரு சூழல் இருக்கக்கூடாது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் வகையில் பாகிஸ்தானும் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

    ×