search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • 40 தொதிகளுக்கு நாளை 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • வாக்குமையங்களுக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

    ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 18-ந்தேதி முதற்கட்டமாக 24 தொதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 25-ந்தேதி 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி இன்று காலை தொடங்கியது.

    வாக்கு எந்திரங்கள் வாக்கு மையத்திற்குச் சென்றதும் நாளை காலை வாக்குப்பதிவுக்கு முன் மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு எந்திரம் சரியாக வேலை செய்கிறதா? என முகவர்கள் முன் வைத்து பரிசோதிக்கப்படும். அதன்பின் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.

    குப்வாரா துணை கமிஷனர் கூறுகையில் "குப்வாரா மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 4 மையங்களில் இருந்து அனுப்பப்படுகினற்ன. பலத்த பாதுகாப்புடன் 622 வாக்கு மையங்களுக்கு அதிகாரிகள் வாக்கு எந்திரங்களை கொண்டு செல்கின்றனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பிங் மையம், ஒரு க்ரீன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    • 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
    • பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படும். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இதையடுத்து, அப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். போலீசார் சார்பில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனே சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக, ஜம்முவின் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின் கூறுகையில், 3-வது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. பயங்கரவாதியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தலின்போது பயங்கரவாத தாக்குதலோ அல்லது வன்முறையோ நடக்காமல் இருக்கும் என தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரசார கூட்டத்தில் பேசினார்.
    • அப்போது அவர், பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிருடன் இருப்பேன் என்றார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் இரு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை மறுதினம் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கார்கேவுருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்தனர். இதையடுத்து, சிறிது ஓய்வெடுத்தபின் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத்தர போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் நான் ஒன்றும் சாகப் போவதில்லை. பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை உயிருடன் இருப்பேன் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

    • 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல்.
    • வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடக்கிறது.

    ஸ்ரீநகர்:

    90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    2-வது கட்டமாக 26 இடங்களுக்கு கடந்த 25-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 56 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

    3-வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.

    ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.


    ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரலிபா இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதால் முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி இன்று தனது பிரசார கூட்டத்தை ரத்து செய்துள்ளார். தனது கட்சி பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுடன் நிற்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து களத்தில் நிற்கிறது.

    மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காஷ்மீர் மக்கள் சாலைகளில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.
    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் புனிதப் போர் தொடரட்டும் என்று தனது அறிக்கையில் மெகபூபா தெரிவித்துள்ளார்.

    நஸ்ரல்லா கொலை 

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நஸ்ரல்லாவின் மரணத்தை அடுத்து ஜம்மு காஷ்மீரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    காஷ்மீர் போராட்டம் 

    ஸ்ரீநகரில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் பெண்கள் உட்பட அதிக அளவிலான மக்கள் சாலைகளில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மக்கள் ஜனநாயக கட்சியின்[பிடிபி] தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நஸ்ரல்லா மற்றைய உயிர் தியாகிகளோடு இணைந்துள்ளார் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் புனிதப் போர் தொடரட்டும் என்று தனது அறிக்கையில் மெகபூபா தெரிவித்துள்ளார்.

    உயிர் தியாகி 

    மேலும் ஹசன் நஸ்ரல்லாவின் உயிர்த் தியாகத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையிலும் பாலஸ்தீனம், லெபனான் மக்களோடு இந்த தருணத்தில் ஒன்றாக நிற்கும் விதமாக இன்றைய தினம் நடக்க இருந்த தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

    ஏன் வலிக்கிறது? 

    இந்நிலையில் மெகபூபாவின் இந்த நடவடிக்கையை பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கவீந்தர் குப்தா, ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது, வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டபோது அவர் வாய்மூடி இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவரது பிரச்சார பேரணி தடைப்பட்டது.
    • 'பிரியங்கா காந்தியின் பேரணி பாஜகவின் நாசகர வேலையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது'

    காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மற்றும் வேட்பாளருமான மனோகர் லால்க்கு ஆதரவு திரட்ட கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா வர ஏற்பாடு செய்திருந்தனர். பிரியங்கா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க இயலாததால் இந்நிகழ்ச்சிகள் தடைப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதவின் இரண்டு கட்டங்கள் முடித்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மூன்றாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ்- என்சிபி கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியில் கலந்துகொண்டு பிரசாரம் செய்ய காஷ்மீர் வந்த நிலையில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில் பிரசாரம் செய்ய பிரியங்கா காந்தி ஹெலிகாபட்டரில் புறப்பட்டு வந்த நிலையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவரது பிரச்சார பேரணி தடைபட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டதுஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு.. பிரியங்காவின் பேரணி ரத்து - பாஜக நாசகர வேலை - காங்கிரஸ் புகார்

    பிரியங்கா காந்தியை பேரணியில் பங்கேற்க விடாமல் பாஜக திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரவீந்தர் சர்மா, பிரியங்கா காந்தியின் பேரணி பாஜகவின் நாசகர வேலையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணயத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு அதிகாரி உள்பட ஐந்து பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.

    குல்காம் மாவட்டத்தின் தேவ்சர் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது,

    இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (போக்குவரத்து) மும்தாஜ் அலி உள்பட 4 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் குழுவின் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • முதல் இரண்டு கட்ட தேர்தல், ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது.
    • இளைஞர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை புறந்தள்ளியுள்னர் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

    ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

    வருகிற 1-ந்தேதி 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஜம்மு காஷ்மீர் மக்கள் குண்டுகளை புறந்தள்ளிவிட்டு வாக்குச்சீட்டுகளை தேர்வு செய்துள்ளனர் என்றார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜம்மு காஷ்மீர் மக்கள் குண்டுகளை புறந்தள்ளிவிட்டு வாக்குசீட்டுகள் பாதையை தேர்வு செய்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இந்த தேர்தல். அவர்கள் தோட்டாக்களுக்கு இதன்மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.

    முதல் இரண்டு கட்ட தேர்தல்களும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. முன்னதாக நடைபெற்ற தேர்தல்கள் போன்று வன்முறை இல்லை. துப்பாக்கிச்சூடு இல்லை. பயங்கரவாத தாக்குதல் இல்லை.

    முதல் இரண்டு கட்ட தேர்தல், ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஸ்திரதன்மை மற்றும் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. இந்தத் தேர்தலை நாங்கள் இப்படித்தான் பார்க்கிறோம்.

    ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன் 300 முதல் 400-க்கும் அதிகமான இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் ஆண்டுதோறும் இணைந்து, பின்னர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படுவார்கள். இன்று வெறும் நான்குதான். தரவுகள் அடிப்படையில் அவர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை புறந்தள்ளியுள்னர் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

    • வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப் படுகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    கடந்த 18-ந்தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2-ம் கட்டமாக நேற்று 26 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுபதிவு நடத்தப்பட்டது. 2 கட்ட வாக்குப்பதிவும் அமைதியாக நடந்து முடிந்தது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    காஷ்மீரில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பாரதீய ஜனதாகளம் இறங்கி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    3- ம் கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    3-ம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வருகிற 29-ந்தேதியுடன் பிரசாரம் முடிவடைய இருக்கிறது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி போட்டியிடுகிறது. மேலும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளும் களத்தில் உள்ளன.

    தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க போவது யார்? என்பது தெரிந்து விடும்.

    • ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதிகளில் 28.84 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
    • இதில் ஹப்பாகடல் தொகுதியில் 16.92 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

    ஜம்மு காஷ்மீரில் நேற்று ஆறு மாவட்டங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தோராயமாக 57.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் அதிகாரி பி.கே. போலே தெரிவித்துள்ளார்.

    பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ரீநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது ஆது 57 சதவீதமாக குறைந்துள்ளது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கந்தர்பால், புட்காம், ஸ்ரீநகரில் 45.39 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள. ஜம்மு, ரியாசி, ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் 73.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    கந்தர்பாலில் இரண்டு தொகுதிகளில் 62.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். புட்காமில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் 63.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதிகளில் 28.84 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் ஹப்பாகடல் தொகுதியில் 16.92 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

    ஹஸ்ரத்பால் தொகுதியில் 30.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014 தேர்தலில் 29.54 சதவீத வாக்குகள் பதிவாகின. 2008-ல் 28.89 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    கன்யார் தொகுதியில் 25.93 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது 2014-ல் 26.16 சதவீதமும், 2008-ல் 17.41 சதவீதமும் பதிவாகியிருந்தது.

    உமர் அப்துல்லா போட்டியிட்ட தொகுதியில் (கந்தர்பால்) 57.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. 2014-ல் 58.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 2008-ல் 51.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மற்றொரு தொகுதியான புட்காமில் வாக்கு சதவீதம் 51.15 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் 66.35 சதவீதமாக இருந்தது.

    ஜம்மு காஷ்மீரில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இருந்த போதிலும் 2014 தேர்தலை விட குறைவுதான்.

    ரியாசியில் 74.71 சதவீதம், பூஞ்ச் மாவட்டத்தில் 73.79 சதவீதம், ரஜோரியில் 71.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • முதற்கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.
    • வைஷ்ணவ தேவி பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடந்தது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை நடந்தது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் 54.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு குறித்து பேசிய ஜம்மு-காஷ்மீருக்கான தலைமை தேர்தல் அதிகாரி பி.கே. போலே, "கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு 79.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன."

    "ரியாசி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக 74.14 சதவீதம் வாக்கு பதிவாகி இருக்கிறது. பூஞ்ச் மாவட்டத்தில் 73.78 சதவீதமும், ரஜோரி மாவட்டத்தில் 69.85 சதவீதமும், கந்தர்பால் மாவட்டத்தில் 62.63 சதவீதமும் மற்றும் புத்காம் மாவட்டத்தில் 61.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.


    • 2வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
    • காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த வாரம் 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்தருணத்தில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×