search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி அதிரடியில் மிரட்டியது.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் 60- 29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 41-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மேலும் பாட்னா பைரேட்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஏற்கனவே அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை கடற்பகுதியில் 80 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது.
    • பலர் உடனடியாக மீட்கப்பட்டனர்.

    மும்பையில் சுமார் 100-க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற படகு மீது, வேகமாக சென்ற கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால பயணிகள் படகு கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 70-க்கும் அதிகமான பயணிகளை மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். முதற்கட்ட தகவிலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள Elephanta Caves பகுதிக்கு படகு மூலம் மக்கள் செல்வது வழக்கம். இன்று அவ்வாறு செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.

    இந்திய கடற்படை, ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆணையம், கடலோர காவல்படை ஆகிய மூன்றும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    • மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்ததுள்ளது.
    • நேற்று சென்செக்ஸ் 1,064.12 சரிவை சந்தித்த நிலையில் இன்று 502.25 புள்ளிகள் சரிந்தது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்றுடன் தொடர்ந்து 3-வது நாட்களாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 4.92 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது.

    இந்த நிலையில்தான் இன்றும் சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகம் சென்செக்ஸ் 80,684.45 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 80,666.26 புள்ளிகளில் வர்த்தகம் ஆரம்பமானது.

    இன்று அதிகபட்சமாக 80,868.02 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,050.07 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக சென்செக்ஸ் 502.25 புள்ளிகள் குறைந்தது 80182.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது. மூன்று நாட்களில் சென்செக்ஸ் 1950.92 புள்ளிகள் சரிந்துள்ளது.

    ஏற்றம் மற்றும் இறக்கம் கண்ட நிறுவன பங்குகள்

    ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ., எல்&டி பங்குகள் சரிவை எதிர்கொண்டன.

    ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐ.டி.சி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்குகள் ஏற்றம் கண்டன.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50-யும் இன்று சரிவை சந்தித்தது. நிஃப்டி 137.15 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24,336.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று நிஃப்டி 24,297.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 24,394.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,149.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 24,198.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • சிஎஸ்எம்டி-கல்யாண் விரைவு ஏசி லோக்கல் ரெயிலில் நடந்துள்ளது
    • மாலை 4:11 மணிக்கு ரெயில் காட்கோபர் நிலையத்தை அடைந்தது

    மும்பை புறநகர் ரெயிலின் பெண்கள் பெட்டியில் நிர்வாணமாக தோன்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த திங்கள்கிழமை சிஎஸ்எம்டி-கல்யாண் விரைவு ஏசி லோக்கல் ரெயிலில் பெண்கள் பெட்டியில் நிர்வாண ஆண் ஒருவர் உள்ளே வந்து நின்றதால் பெண்கள் மத்தியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த பயணி ஒருவர் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வைரலாகி வருகின்றது. மாலை 4:11 மணிக்கு ரெயில் காட்கோபர் நிலையத்தை அடைந்தபோது, பெண்கள் கோச்சின் கதவு அருகே அந்த நபர் ஏறி நின்றார்.

    பெண் பயணிகளின் கூச்சலை தொடந்து பக்கத்து பெட்டியில் இருந்த ஒரு டிக்கெட் பரிசோதகர் விரைந்து வந்து அந்த நபரை வெளியேறினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் ரெயில்வே போலீஸ் அந்த ஆசாமியை தேடி வருகிறது.

    • புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது.
    • மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் - பெங்களூரு அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜெய்ப்பூர் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 35-26என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் உ.பி. அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் உ.பி. யோதாஸ் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது. இதில் ஆரம்பம் முதலே உ.பி. அணி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், உ.பி. யோதாஸ் அணி, அரியானா அணியை 31-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இது உ.பி. அணிக்கு கிடைத்த 11-வது வெற்றி ஆகும்.

    • கடந்த 5-ம் தேதி நடந்த விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
    • மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை உத்தவ் தாக்கரே சந்தித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி வெளியானது.

    இதில் பா.ஜ.க, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து மும்பையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை நாக்பூர் விதான் பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது பட்னாவிசுக்கு உத்தவ் தாக்கரே பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்தச் சந்திப்பின்போது உத்தவ் தாக்கரேவுடன் ஆதித்யா தாக்கரே உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் இதை செய்தேன்
    • பாதுகாப்பு அதிகாரிகளை தாண்டி ஒரு மரத்தின் அருகில் சென்றேன்.

    பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாடோ [ZOMATO] ஏற்பாடு செய்த பிரையன் ஆடம்ஸ் கச்சேரி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழிவறை வசதி இல்லாததால் தனது கால் சட்டையிலேயே சிறுநீர் கழித்ததாக நீரழிவு நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ZOMATO சிஇஓ தீபிந்தர் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிபுணரான ஷெல்டன் அரன்ஜோ தனது கடிதத்தில், பிரையன் ஆடம்ஸ் கச்சேரியில் சிறுநீர் கழிக்கதான் நான் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கினேன் போலும்.

     

    பாம்பே கன்வென்ஷன் & எக்ஸிபிஷன் சென்டரின் குளிரூட்டப்பட்ட அரை எனக்கு சிறுநீரை வரவழைத்தது. அதற்காக நீண்ட அரிசில் கழிவறைக்கு முன் காத்துக்கிடந்தேன். ஆனால் வரிசை நகர்வதாக இல்லை. மற்றொரு வரிசைக்கு மாறினேன்.

    ஆனால் அதுவே OTHER CATAGORY கழிவறை, எனவே அங்கு நான் செல்ல முடியாது. எனவே கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் பாதுகாப்பு அதிகாரிகளை நைசாக தாண்டி ஒரு மரத்தின் அருகில் எனது அவஸ்த்தையை இறக்கி வைத்தேன்.

    ஆனால் அதற்கு முன்னதாகவே எனது சிறுநீர் பேண்டில் இறங்கி விட்டது. நான் ஒரு சர்க்கரை நோயாளி, எனவே இதை சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை,1000 விருந்தினர்களுக்கு மொத்தமே அங்கு 3 கழிவறைகள் ஒதுக்கிய நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்  என்று அவர் தனது திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

     

    • போராட்டங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ட்டனர்.
    • சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

     

    பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

     

    அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவரும் அடங்குவார். பர்பானி மாவட்ட மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 [ஞாயிற்றுக்கிழமை] காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சூர்யவன்ஷியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட அவரது பிரதேச பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியான நிலையில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது.

     

    நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.

    பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.இந்நிலையில் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில்  மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.

    பின்னர், அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வருவதற்கு பதிலாக லத்தூரில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியுள்ளது.

    காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது.

    பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

     

     

    இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சூரியன் மற்றும் சைனீஸ் பெல் [Bhel] உணவை தயாரிப்பதற்கு மாவரைக்க கிரைண்டரை சூரஜ் இயக்கியுள்ளார்.
    • பாதுகாப்போ பயிற்சியோ இல்லாமல் அவரை கிரைண்டரை இயக்க வைத்துள்ளார் உணவக முதலாளி

    மும்பையில் உணவகத்தில் உணவு தயாரிக்கும் போது கிரைண்டரில் சிக்கி 19 வயது ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஜார்கண்டை சேர்ந்த 19 வயதான சூரஜ் நாராயண் யாதவ் என்ற இளைஞர் சமீபத்தில் மும்பைக்கு வந்து வோர்லி பகுதியில் உள்ள சாலையோர சீன உணவுக் கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.

    இந்நிலையில் மஞ்சூரியன் மற்றும் சைனீஸ் பெல் [Bhel] உணவை தயாரிப்பதற்கு மாவரைக்க கிரைண்டரை சூரஜ் இயக்கியுள்ளார்.

    அவர் கையை உள்ளே வைத்தபோது, அவரது இடுப்பு உயரத்தில் இருந்த கிரைண்டர் இயந்திரத்தில் அவரது சட்டை மாட்டிக்கொண்டது. அடுத்த சில நொடிகளில் கிரைண்டருக்கு இழுபட்டு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    சூரஜ்க்கு அத்தகைய உபகரணங்களை இயக்குவதில் முன் அனுபவம் இல்லை என்றும் முறையான பாதுகாப்போ பயிற்சியோ இல்லாமல் அவரை கிரைண்டரை இயக்க வைத்த உணவக முதலாளி சச்சின் கோதேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது.
    • குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,133.12 புள்ளிகளுடன் வர்த்தகம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 82,000.31 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏதும் இல்லை. சரிவைத்தான் சந்தித்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,166.44 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 82,551.28 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,748.57 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய சென்செக்ஸ் புள்ளிகளுடன் 384.55 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்

    பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, இந்துஸ்தான்இந்த் வங்கி பங்குகள் ஏற்றம் கண்டன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50

    இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று 100.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை மதியம் வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் நிஃப்டி 24,753.40 புள்ளிகளில் தொடங்கியது. இன்று நிஃப்டி அதிகபட்சமாக 24,781.25 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24,601.75 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

     

    இறுதியாக நிஃப்டி 100.05 புள்ளிகள் குறைந்த நிஃப்டி 24,668.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஏற்றம் மற்றும் சரிவு கண்ட நிறுவனங்கள்

    அல்ட்ரா டெக் சிமெண்ட், என்.டி.பி.சி., விப்ரோ, ஓ.என்.ஜி.சி., டைட்டன், அதானி என்டர்பிரைசர்ஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.

    கோல் இந்தியா, டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைவ் இன்சூரன்ஸ் பங்குகள் ஏற்றம் கண்டன.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெய்ப்பூர் அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 34-27 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோதாஸ் அணி யு மும்பா அணியை 30-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    ×