என் மலர்
ராஜஸ்தான்
- உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.
- வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.
ஜெய்ப்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-
ஒற்றுமையே ராஜஸ்தானின் செல்வம். நாம் பிளவுபடும் போது எல்லாம் நாட்டின் எதிரிகள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான, நேர்மையான அரசு என்ன செய்ய முடியும் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.
2014-ல் மோடிக்கு சேவை செய்ய நீங்கள் வாய்ப்பு கொடுத்த போது யாரும் நினைத்து கூட பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது. அனுமன் மந்திரம் கேட்பது காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அனுமன் மந்திரம் கேட்ட கடைக்காரர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை நாட்டின் முன் வைத்தேன். நான் கூறிய உண்மைகளை கேட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.
உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.
காங்கிரசை அம்பலப்படுத்தியதால் என்னை அவமதிக்கிறார்கள். உண்மையை ஏன் மறைக்கிறார்கள். நீங்களே கொள்கைகளை உருவாக்கி விட்டு தற்போது அதை ஏற்க பயப்படுவது ஏன்? தைரியம் இருந்தால் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நான் தயார்.
நாட்டின் அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் நாடகமாடியுள்ளது. அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது உரையில் நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறி இருந்தார்.
காங்கிரசின் சிந்தனை எப்போதுமே சமாதானம் மற்றும் வாக்கு வங்கி அரசியலாகவே இருந்து வருகிறது. 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவில் எஸ்.சி. எஸ்.டி. இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்தது.
இது ஒரு முன்னோடி திட்டமாகும். இதை நாடு முழுவதும் முயற்சி செய்ய காங்கிரஸ் விரும்பியது. 2004 மற்றும் 2010-க்கு இடையில் ஆந்திராவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் 4 முறை முயற்சி செய்தது.
ஆனாலும் சட்ட தடைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் விழிப்புணர்வு காரணமாக அவர்களால் அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.
இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படை தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்துள்ள காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுடைய சொத்துக்களை பகிர்ந்து அளித்து விடும் என்று முஸ்லிம்கள் குறித்து பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் தான் சொன்னது எல்லாம் உண்மை என்று மீண்டும் காங்கிரஸ் மீது மோடி குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
- இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
- ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.
- டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.
அதன்படி, மும்மை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். தொடர்ந்து, நேஹல் வதேரா 49 ரன்களும், முகமது நபி 23 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் எடுத்தனர்.
ரோகித் சர்மா 6 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவித் 3 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதனால், 180 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் இறங்குகிறது.
- விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
- விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்:
மத்தியபிரதேச மாநிலம் கில்சிபூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று விட்டு 10 பேர் கொண்ட குழுவினர் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2.40 மணியளவில் அந்த வேன் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த திருமண கோஷ்டியினர் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இதில் 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விபத்தில் பலியான 9 பேரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓடினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
- காரில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் பயணித்தனர்.
- நொடிப்பொழுதில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
ஜெய்ப்பூர்:
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் சலாசர் நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு காரில் சென்றனர்.
பின்னர் அவர்கள் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அரியானாவின் ஹிசார் காரில் புறப்பட்டனர். காரில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் பயணித்தனர். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் அர்ஷிவாட் புலியா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவர் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியது. இதில் காரில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றியது. நொடிப்பொழுதில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் காருக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- வேலையின்மை, பணவீக்கம் பற்றி ஊடகங்கள் மக்களுக்கு சொல்லாது என்றார் ராகுல் காந்தி.
- இது ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றும் தேர்தல் என்றார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை கொண்டு வாருங்கள். இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்.
பணவீக்கத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என பெண்கள் கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள்.
வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அவர்களின் வேலை. 20 தொழிலதிபர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார்.
ஒருபுறம் பெரிய தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பணம் பெற்றுள்ளது. மறுபுறம் காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றும் தேர்தல். நாட்டின் உண்மையான பிரச்சனைகளான வேலையின்மை, பணவீக்கம் பற்றி ஊடகங்கள் மக்களுக்கு சொல்லாது என தெரிவித்தார்.
- கிராமத் தலைவரான சுர்ஜராம் கோதாராவின் குழந்தைகள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.
ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் தனது 17 பேரக்குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
ராஜஸ்தானில் நோகா மண்டலத்தில் உள்ள லால் மதேஸர் கிராமத்தை சேர்ந்தவர் சுர்ஜராம் கோதாரா. கிராமத் தலைவரான இவரின் குழந்தைகள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவரது குடும்பத்தில் 17 பேரக்குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டிய நிலையில், அவர்களுக்கு தனித்தனியாக திருமணம் செய்து வைத்தால் செலவு அதிகம் ஆகும் என கருதினர்.
எனவே தங்களது பேரக்குழந்தைகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்த சுர்ஜராமின் குடும்பத்தினர் இதற்காக ஒரே அழைப்பிதழை தயார் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்கள் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு முதல் நாளில் 5 பேரன்களுக்கும், மறுநாளில் 12 பேத்திகளுக்கும் திருமணம் நடந்தது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ் தான் ஆடிய 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மழை காரணமாக டாஸ் போட தாமதமானது. இரவு 7.25 மணிக்கு டாஸ் போடப்பட்டடது.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
- ஐபிஎல் புள்ளி பட்டியலில் கொல்கத்தா 2ம் இடத்தில் உள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு அணி 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது.
நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது.
- ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார்.
- எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை ஆகியவற்றை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது.
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தை மாற்ற சதி நடக்கிறது. நாட்டையும், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி அழித்து வருகிறார்.
எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி, அவர்களை கட்சியில் சேர்க்க அனைத்து யுத்திகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது.
அனைத்து இடங்களிலும் அநீதி என்ற இருள் நிலவுகிறது. இதற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும் என தெரிவித்தார்.
#WATCH | Jaipur: Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi says "...'Modi ji khud ko mahaan maan kar, desh aur loktantra ki maryada ka cheer haran kar rahe hain'...Opposition leaders are threatened to join the BJP. Today, the democracy of our country is in… pic.twitter.com/dgAImvNzRt
— ANI (@ANI) April 6, 2024
- 10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான்.
- மோடி முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை.
பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏமாற்றம் மற்றும் விரக்தி என்னை (மோடி) நெருங்க முடியாது. இன்று ஒட்டுமொத்த நாடும் இந்தியாவை முன்னனேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பணியாற்றி கொண்டிருக்கிறது. இதில் ராஜஸ்தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
மற்ற கட்சிகளை போன்று பா.ஜனதா வெறும் கோஷ்னா பத்ரா செய்யவில்லை. நாங்கள் சங்கல்ப் பத்ரா கொண்டு வருகிறோம். 2019-ல் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.
10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான். பசியை தூண்டுவதுபோல், முக்கியமானது இன்னும் வெளியாகவில்லை. முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை. மொத்த இஸ்லாமிய குடும்பங்களையும் பாதுகாத்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.