search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ராஜஸ்தான் மாநில பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி.
    • பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி. இவர் உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றி பெற்றவர்

    இந்நிலையில், பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக் கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார். வேறு என்ன பிரச்சனை உங்களுக்கு? என கேள்வி எழுப்பினார்.

    பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • கரண்பூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வி அடைந்தார்
    • பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்

    ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் நவம்பர் 25ம் தேதி மற்றும் டிசம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கரண்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜன.5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜன.5 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானது.

    அதனைத்தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.

    • ராஜஸ்தானில் முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
    • ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மேவாராம் ஜெயின் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மரைச் சேர்ந்த மேவாராம் ஜெயின் உள்ளிட்ட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக்கூறி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண் புகார் அளித்தார். அதில், மேவாராம் ஜெயின் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். அதன் அடிப்படையில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் அவரது 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ.வான மேவாராம் ஜெயின் இன்று காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என மாநில காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • ராஜஸ்தானில் அமைச்சரவை இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ளார்
    • துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன

    ராஜஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பஜன்லால் சர்மா முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா தேர்வு செய்யப்பட்டார். மேலும் 22 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற 22 அமைச்சர்களுக்கு இலாகாக்கல் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சரவை இலாகா தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சரின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உள்பட 8 துறைகளை தன் வசம் வைத்துக்கொண்டார். துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதலமைச்சரான பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் கிம்சாரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மதன் திலாவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
    • பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரபல தலைவர்கள், சாதனையாளர்கள், விருது பெற்றவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. மேலும், கோவிலை சுற்றி அவரது சிலைகள் வைக்கப்பட இருக்கிறது.

    ராமர் கோவிலில் வைக்கப்பட இருக்கும் சிலைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தலைசிறந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிற்பி 51 இன்ஞ் உயரமுள்ள குழந்தை வடிவிலான ராமர் சிலையை வடிவமைத்துள்ளார்.

    இந்த சிலை நேற்று உத்தர பிரதேசம் சென்றுள்ளது. கும்பாபிஷேக விழா வருகிற 16-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது.

    இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்திக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு.
    • புத்தாண்டு முதல் விலை குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்து இருக்கும் பா.ஜ.க. அரசு கியாஸ் சிலிண்டர்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை குறைப்பதாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.

    அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் ரூ. 450-க்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பேசிய முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா, மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார். 

    • திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.

    இதையடுத்து புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பஜன்லால் சர்மா புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை முதல்-மந்திரியாக திவ்யா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா இன்று ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    மேலும் திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றனர். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட பஜன்லால் சர்மா சங்கேனர் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 48,081 வாக்குகள் வித்தியாசததில் தோற்கடித்தவர்.

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றிவர். ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே முதல்-மந்திரி பதவி அவரை தேடி வந்துள்ளது. பஜன்லால் சர்மா ராஜஸ்தான் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றான பத்பூரை பூர்வீகமாக கொண்டவர். அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

    • ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மா இன்று தேர்வு செய்யப்பட்டார்.
    • அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வி அடைந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அசோக் கெலாட் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே, ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பஜன்லால் சர்மாவை ராஜஸ்தான் முதல் மந்திரியாக தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    துணை முதல் மந்திரிகளாக தியா சிங் மற்றும் பிரேம் சந்த் பெய்வா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகராக வசுதேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், முதல் முறையாக சாங்கனேர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.வான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு ராஜ்நாத் சிங், வசுந்தரா ராஜே உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் முதல் மந்திரி யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

    முதல் மந்திரிக்கான போட்டியில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
    • மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.

    என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோகமெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுகதேவ் தனது வீட்டில் நேற்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் சுகதேவ் சிங் கோகமெடி உயிரிழந்தார்.

    அவருடன் பேசிக்கொண்டிருந்த நபர் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.


    ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் படுகொலைக்கு வசுந்தர ராஜே சிந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் அரசியல் கட்சி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு இன்று ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பினர் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
    • துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    சுகதேவ் தனது வீட்டில் இன்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டது.

    இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். சுகதேவ் உடன் பேசிக் கொண்டிருந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×