search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக புறப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் அளித்த ராகுல் காந்தி "நாங்கள் ஒற்றுமைய உள்ளோம். ஒற்றுமையாக இருப்போம். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும்" என்றார்.

    ராகுல் காந்தியுடன் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் செல்கின்றனர்.

    ராகுல் காந்தி ஹனுமான்கார்ஹ், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார்.

    ராஜஸ்தானில் பொதுவாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் மாறிமாறிதான் ஆட்சியை பிடித்துள்ளன. இந்த முறை தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.

    • ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
    • காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல்காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நேற்று வந்தனர்.

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படும் நிலையில், அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக சோனியா காந்தி ஜெய்ப்பூருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபாலிடம் சோனியாவின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் தனிப்பட்ட பயணமாக சோனியா காந்தி ஜெய்ப்பூர் வந்துள்ளதாக பதில் அளித்தார்.

    மேலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இதனிடையே, உடல்நலப் பிரச்சனை காரணமாக 4 நாள் பயணமாக ஜெய்ப்பூருக்கு சோனியா வந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை அகற்ற பா.ஜனதா தீவிரம்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரேநாளில் ராஜஸ்தானில் பிரசாரம்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மிசோரமில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 17-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி மற்றும் 18-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ராஜஸ்தானில் பிரசாரம் செய்ய இருக்கிறார். 15-ந்தேதி பார்மெர் மாவட்டத்தில் உள்ள பெய்டூ என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 18-ந்தேதி பாரத்புர் மற்றும் நகாயுர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 16-ந்தேதி டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹக், பிம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    நவம்பர் 18-ந்தேதி அஜ்மிர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதன்பின் நடைபெறும் ரோடுஷோவிலும் கலந்து கொள்கிறார்.

    இருவரையும் தவிர்த்து ஜெய்ப்பூரில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சி தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறார். அத்துடன் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கிறார்.

    • சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.
    • சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பூபேந்திர சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது போலீஸ் நிலையத்தை ஒட்டிய வீட்டில் வசிக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் மகளான 4 வயது சிறுமி அங்கு விளையாட சென்றுள்ளார்.

    அப்போது அந்த சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர்.

    ஆனால் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது சிலர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங்கை பிடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பூபேந்திரசிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா எம்.பி. கிரோடி லால் மீனா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் கூறுகையில், தலித் சிறுமியை சப்-இன்ஸ்பெக்டர் பலாத்காரம் செய்த சம்பவம் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவி குழந்தைக்கு நீதி கிடைக்க சம்பவ இடத்திற்கு வந்துள்ளேன்.

    அசோக் கெலாட் அரசின் திறமையின்மையால் எதேச்சதிகாரமாக மாறி உள்ள காவல்துறை, தேர்தல் போன்ற முக்கியமான சந்தர்ப்பத்தில் கூட அட்டூழியங்களை செய்ய தயங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், மாநில சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எல்லா வகையிலும் உதவி செய்யப்படும் என்றார்.

    • ராஜஸ்தானில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம் என்றார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜெய்ப்பூரில் முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமரை யாரோ தவறாக வழிநடத்தி விட்டனர் அல்லது அவருக்கு சரியாக விளக்கமளிக்கவில்லை.

    ஜனநாயகத்தில் நேற்று அவர் பயன்படுத்திய மொழி ஆட்சேபணைக்குரியது. ராஜஸ்தானில் நிலவும் சூழல் காரணமாக அவர் பதற்றமடைந்து இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு இருக்கலாம்.

    இதுபோன்ற மொழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    • ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது.
    • தலித், ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை.

    இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து இன்று (நவம்பர் 9) மாலை ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் அசோக் கெலோட் தலைமையிலான அரசு ராஜஸ்தான் மாநிலத்தை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலின் முதலிடத்திற்கு கொண்டுவந்துள்ளது."

    "ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தலித் மற்றும் ஏழை மக்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை. முதல்வர் இருக்கையில் யாரை அமர வைப்பது என்பதை முடிவு செய்வதிலேயே காங்கிரஸ் அரசாங்கம், ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளை வீணடித்து விட்டது."

    "நவம்பர் 25-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம்," என்று தெரிவித்தார்.

    • ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதேவேளையில், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கஜானா திவாலாகுவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளதாக பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பூனவாலா கூறியிருப்பதாவது:-

    இமாச்சல பிரதேசத்தில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. பிரியங்கா காந்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த மின்சார கட்டணம் குறையும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு டீசல் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லை என காங்கிரஸ் சொல்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தை திவலாக்குவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளது. ராஜஸ்தான் கருவூலம் காலியாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்சன் வழங்க மாநில அரசால் முடியவில்லை.

    அதேவேளையில் பா.ஜனதா வளர்ச்சி, நல்லாட்சி, கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு முன்னேற்றம் ஆகியவை குறித்து உத்தரவாதம் அளித்துள்ளது.

    இவ்வாறு பூனவாலா தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்கிறது.
    • எங்களது முகம் பிரதமர் மோடி, தாமரை என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

    200 தொகுதிளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைகிறது. இதனால் பா.ஜனதா கடைசி கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். உடனே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொதுவாக பா.ஜனதா கட்சி மாநிலத் தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. இந்த நடைமுறையைத்தான் ராஜஸ்தானிலும் கடைபிடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சந்தியா ஓரங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் வேறு நபர்தான் முதல்வராக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில் ''தற்போது பிரதமர் மோடி மற்றும் தாமரைதான் எங்கள் முகம் (தேர்தலில் முன்னிறுத்துவது). பின்னர் எம்.எல்.ஏ.-க்கள், கட்சியின் பாராளுமன்ற குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வார்கள். முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும் அவருடைய பதிக்காலம் முழுமை அடைவதை உறுதி செய்வோம்'' என்றார்.

    • 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல்
    • நேற்று கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜனதா

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால், நேற்று மதியம் வரை 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை பா.ஜனதா அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    உதைப்பூரில் உள்ள மாவ்லி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கோபால் சர்மா, தொழில் அதிபர் ரவி நய்யார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது.

    கடந்த 2-ந்தேதி 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் மந்திரி தவ் சிங் பாதியின் மறுமகள் பூனம் கன்வார் பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்குப் பதிலாக அவரது, மகன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாக இருக்கும்  கிரிராஜ் மலிங்கா பா.ஜனதா கட்சிக்கு தாவியுள்ளார். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், பா.ஜனதா அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    • இந்த மாத இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
    • கடந்த செப்டம்பர் மாதமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம் எனப்படும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஒப்பந்தப் பணியில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்நிலையில், ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத ஹவாமஹால் தொகுதியில் பால்முகந்த் ஆச்சார்யா நிறுத்தப்பட்டுள்ளார்.
    • தேர்தலை முன்னிட்டு, இரண்டு பட்டியல்களில் பாஜக 124 வேட்பாளர்களை அறிவித்தது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வரும் 7ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் மற்றும் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

    இந்நிலையில், மூன்றாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில், முதல்வர் அசோக் கெலாட்டை எதிர்த்து சர்தார்புரா தொகுதியில் மகேந்திர சிங் ரத்தோர் போட்டியிடுகிறார்.

    அசோக் கெலாட்டின் முன்னாள் துணைத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டை எதிர்த்து பாஜக தலைவர் அஜித் சிங் மேத்தா டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத ஹவாமஹால் தொகுதியில் பால்முகந்த் ஆச்சார்யா நிறுத்தப்பட்டுள்ளார்.

    முன்னதாக, இரண்டு பட்டியல்களில் பாஜக 124 வேட்பாளர்களை அறிவித்தது. இதுவரை, ராஜஸ்தானில் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 182 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    • ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
    • அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், FEMA வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் நாளை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பான அசோக் கெலாட் கூறியதாவது:-

    நேற்று, காங்கிரஸ் ராஜஸ்தான் பெண்களுக்கான உத்தரவாதத்தை வெளியிட்டது. இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, எனது மகனுக்கு ஆஜராகும்படி சம்மன் நடவடிக்கை.

    ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் காங்கிரஸின் உத்தரவாதத்தின் பலன்களை பெறுவதை பா.ஜனதா விரும்பவில்லை. நான் என் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.

    நேற்று நடைபெற்ற பேரணியின்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும்'' என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×