என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரதமர் மோடி இப்படி பேசுவது ஆட்சேபணைக்கு உரியது: ராஜஸ்தான் முதல் மந்திரி
- ராஜஸ்தானில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம் என்றார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமரை யாரோ தவறாக வழிநடத்தி விட்டனர் அல்லது அவருக்கு சரியாக விளக்கமளிக்கவில்லை.
ஜனநாயகத்தில் நேற்று அவர் பயன்படுத்திய மொழி ஆட்சேபணைக்குரியது. ராஜஸ்தானில் நிலவும் சூழல் காரணமாக அவர் பதற்றமடைந்து இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு இருக்கலாம்.
இதுபோன்ற மொழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம் என தெரிவித்தார்.