என் மலர்
மேற்கு வங்காளம்
- நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம்.
- காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள தக்சின் தினாஜ்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மம்தா பானர்ஜி ஊடுருவலை தடுக்கமாட்டார். ஏனென்றால் ஊடுருபவர்கள் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவல் ஊடுருவலை தடுக்க முடியும். நாங்கள் அசாம் மாநிலத்தில் ஊடுருவலை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் 30 இடங்களுக்கு மேல் பிடிப்போம். மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு நாங்கள் ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம். பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
ஏப்ரல் 17-ந்தேதி ராம் நவமி. கடவுள் ராமர் பிறந்த தினம். ஐந்து வருடத்திற்குள் ராமர் கோவில் விசயத்தை பிரதமர் மோடி முடித்து வைத்தார். பூமி பூஜை நடத்தப்பட்டு கோவில் கட்டப்பட்டது. 500 வருடத்திற்குப் பிறகு கடவுள் ராமர் அவரது பிறந்த இடத்தில் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ராம நவமி அவரது பிரமாண்ட வீட்டிற்குள் நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லிம் தனிச்சட்டம் கொண்டு வரப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது எனச் சொல்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தாய்லாந்தின் போட்டோ இடம் பிடித்துள்ளது. ஏனென்றால், ராகுல் பாகா தொடர்ச்சியாக விடுமுறைக்காக அங்கே செல்கிறார்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
- 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்
மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, தேர்தல் பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்?
- பா.ஜனதா என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா?
மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பூபதிநகர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. என்ஐஏ குழு இன்று காலை சோதனை நடத்தியபோது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இருந்தபோதிலும் பாலை சரண் மெய்தி மற்றும் மனோப்ரதா ஜனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உள்ளூர் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். உள்ளூர் காவல் நிலையத்தில் என்ஐஏ புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் என்ஐஏ பா.ஜனதாவுக்காக வேலை செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்? அவர்களுக்கு போலீஸ் அனுமதி கொடுத்தது யார்? நள்ளிரவில் வேறு யாராவது அந்த இடத்திற்குச் சென்றிருந்தால், உள்ளூர்வாசிகள் எப்படி கையாண்டு இருப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் ஏன் கைது செய்தார்கள்?.
பா.ஜனதா என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா? என்ஐஏ-யின் உரிமை என்ன? பா.ஜனதாவுக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து வருகிறது. இந்த பா.ஜனதாவின் மோசமான அரசியலுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.
- மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?
- சிபிஐ, ஐடி, ஈடி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நமது அரசு சிறப்பாக செயல்பட்டது.
அனைத்து ஏஜென்சிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?.
வங்காளத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இங்கு இருக்கும்வரை வங்காள மக்களைத் தொடத் துணிய மாட்டார்கள்.
சிஏஏ தேர்தலுக்கு முன் கொண்டு வரப்பட்டது. உங்கள் பெயரை பதிவு செய்ய சமர்ப்பித்தவுடன் நீங்கள் ஒரு வங்காளதேசியாக அறிவிக்கப்படுவீர்கள்.
சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் ஈ.டி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.
விசாரணை அமைப்புகள் பா.ஜ.க.வுக்காக செயல்படுவதால் சமநிலையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியை பா.ஜ.க. மட்டும் பின்பற்றுகிறது என தெரிவித்தார்.
- மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
- வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம் தொடங்கி, ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜல்பைகுரி பகுதியில் அமைந்துள்ள டீக்கடைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சென்றார். அங்கு டீ தயாரித்துக் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா
- கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
மேலும், இந்த புகார் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு சிபிஐ சார்பில் சம்மனும் அனுப்பப்பட்டது.
ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி, அந்த சம்மனை நிராகரித்தார்.
இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தேர்தல் வெற்றியே, தனது எம்பி-பதவியை பறித்த பாஜகவின் சதி மற்றும் சிபிஐ சோதனை, சம்மன்களுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
- 2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி லக்ஷ்மிர் பந்தர் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
- இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி "2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி லக்ஷ்மிர் பந்தர் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம். இந்த திட்டத்தை காப்பியடித்து பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அந்த கட்சி திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த பட்ஜெட்டில் பொதுப்பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவில் பின்தங்கிய பெண்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமையல் சிலிண்டர் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டால், நாங்கள் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களையும் திரும்பப் பெறுகிறோம் என்பதை உறுதியாக கூறிகிறேன்.
நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ, அதை செய்துள்ளோம். பிரதமர் மோடி ஒவ்வொரு மக்களின் வங்கி கணக்கில் 14 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றார். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மம்தா பானர்ஜியின் வாக்குறுதியுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட பெண்களையும் சென்றடைகிறது.
- வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
- ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
மேற்கு வங்க போலீசார் தனது சமூக வலைதள பக்கங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது ஐ.பி.எல். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க போலீசார் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விராட் கோலி ஹெல்மெட் அணிந்து கொண்டு சிக்சர் விளாசும் ஒரு காட்சியுடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி சிக்சர் அடிக்கும் காட்சி உள்ளது. அப்போது கோலி சிக்சர் அடித்த பந்து மைதானத்தில் கூட்டத்தினரின் மத்தியில் விழுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
#ViratKohli #SafeDriveSaveLife pic.twitter.com/2Jyn4r6p6Q
— West Bengal Police (@WBPolice) March 29, 2024
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார்.
- அந்த விபத்தில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 14-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
நெற்றியில் காயத்துடன் மயங்கிய நிலையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்து நலமுடன் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் நெற்றி காயத்துடன் மம்தா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா மேயர் மற்றும் மந்திரி பிர்ஹாத் ஹக்கீம், எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
#WATCH | Kolkata: West Bengal CM Mamata Banerjee along with Kolkata Mayor and West Bengal Minister Firhad Hakim, MP Derek O'Brien and other leaders attend Iftar party at Park Circus Ground. pic.twitter.com/5MVns5o8eP
— ANI (@ANI) March 28, 2024
- கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
- இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.
- தற்போது சமூக ஊடக தளமான எக்ஸ் வீடியோ தளத்தில் ஏ.ஐ. தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது.
- பெங்காலி மொழியில் பேசிய சமதா, வங்காள மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கணினித் தொழில் நுட்பத்தில் ஏ.ஐ எனப்படும் (ஆர்டிபிஷியல் இன்டலி ஜன்ஸ்) செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பங்காற்றி வருகிறது. இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இதனை அரசியலிலும் புகுத்தி உள்ளனர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிரசாரத்திற்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை கம்யூனிஸ்டு கட்சி பயன்படுத்தி உள்ளது. தனது முகநூல் பக்கம் மற்றும் யூ.டியூப் சேனலில் பிரசாரத்திற்காக தொகுப்பாளர் சமதாவை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் டிஜிட்டல் பிரிவு 6 மாதங்களுக்கும் மேலாக இதனை சோதனை ரீதியாக பயன்படுத்தி உள்ளது. தற்போது சமூக ஊடக தளமான எக்ஸ் வீடியோ தளத்தில் ஏ.ஐ. தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது. பெங்காலி மொழியில் பேசிய சமதா, வங்காள மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூறுகையில், இந்த மாதிரி பேச்சு கம்யூனிஸ்டுக்கு ஒத்து வராது. கம்ப்யூட்டரை மூடியவர்கள் இன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றார்.
பா.ஜனதா தலைவர் சின்கா கூறும்போது, ஏ.ஐ. நன்மை செய்யாது. சி.பி.எம். முன்பு தொழில்நுட்பத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தை பின்னுக்கு தள்ளியது. தற்போது தொழில் நுட்பத்தை எதிர்கொள்வது முரண்பாடானது என்றார்.
இதற்கு பதில் அளித்த கம்யூனிஸ்டு கட்சியின் ஜாதவ்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, கணினிகளை செயல்படுத்துவதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் எதிரானது அல்ல என்றார்.
- பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாக குற்றச்சாட்டு.
- இந்த குற்றச்சாட்டில் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகளை கேட்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்றதாகவும், பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான ஐ.டி. மற்றும் ரகசிய குறுயீட்டை மற்றவருக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில் பாராளுமன்ற மக்களவை நன்னடத்தை குழு விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
என்றபோதிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில்தான் குடியுரிமை இல்லா வெளிநாட்டினருக்கு அல்லது என்ஆர்இ-க்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்த விரும்புவதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சம்மனில் இன்று ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மஹுவா மொய்த்ரா நான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வரும் நிலையில், சம்மனை நிராகரித்துள்ளார். இன்று மதியம் கிருஷ்ணநகர் தொகுதியில் பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.