என் மலர்
மேற்கு வங்காளம்
- பணவீக்கம் பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?
- விவசாயிகள் தற்கொலைகளை பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?
பிரமதர் மோடி நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது டிஜிட்டில் பண பரிவர்த்தனை, ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தல், பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம் குறித்து பேசினார். மேலும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக மேற்கு வங்காள மாநில மந்திரி சாஷி பஞ்சா கூறுகையில் "எதிர்மறை வாக்குகளை பெற்று பா.ஜனதா வெற்றி பெற விரும்புகிறதா? இதுதான் எங்களுடைய கேள்வி.
பணவீக்கம் பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?. அதை குறைப்பதற்கு அவர்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்களா?.
விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த பணியாற்றி கொண்டிருக்கிறார்களா? அது பற்றி பிரதமர் மோடியால் பேச முடியுமா?.
நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாட்டு மக்கள் மேலும் என்ன விரும்புகிறார்கள் என்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகள் மீது தவறுகளை கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
பா.ஜனாதா எதிர்மறை வாக்குகளாலும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை அமைப்புகளாலும் வெற்றி பெற முடியும் என பிரதமர் நினைக்கிறார்" என்றார்.
- பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள்.
- பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது, காங்கிரசுக்கு ஒன்றுமில்லை என்று பா.ஜ.க. சொல்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிரொலியாக காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைத்தாலும் போதும் என மம்தா பானர்ஜி கூறுகிறார்.
பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். மம்தா பானர்ஜியும் அதையே சொல்கிறார்.
பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள்? உங்களுக்கு (மம்தா பானர்ஜி) மாநிலம் பின்னர், ராகுல் காந்திக்கு நாடு முதலில், மற்ற அனைத்தும் பின்னர் என தெரிவித்தார்.
- அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று பிற்பகலில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதமந்திரி ஆவாஸ் யோஜனா உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேணடிய பல கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ளது. அந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி மத்திய அரசுக்கு எதிராக அவர் கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். குளிருக்கு மத்தியில் இரவு முழுவதும் தொடர்ந்து. தர்ணா நடைபெற்று வரும் இடத்திலேயே இரவில் தங்கினார் .
அவர் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் 2-வது நாள் போராட்டத்தில் குதித்தார். மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.
- பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால்.
- இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக யாத்திரைக்கு வந்துள்ளனர்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
மேலும், இந்தியின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால் விடுத்தார்.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்ததையும் மம்தா விமர்சித்தார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் 300 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இப்போது, இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக அவர்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.
காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிலுவை தொகையை விடுவிக்க கோரி தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா கூறினார்.
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு மாநிலத்தின் பாக்கிகள் 7,000 கோடி ரூபாய் எனவும், இதற்கான நிதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி தர்ணாவில் ஈடுபட உள்ளேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் , "கொல்கத்தா ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் தர்ணா போராட்டம் தொடங்கும். எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு தலைமை தாங்குவார். இதில் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தா ரெட் ரோட்டில் மைதான பகுதியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தொடங்கினார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.
- பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்ட யாத்திரையான "இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை" கடந்த 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார்.
பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, பின்னர் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.
பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் குறிக்கோள் நாட்டிற்கு பொருளாதார மற்றும் சமூக நீதியை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் நடந்த யாத்திரையின்போது முர்ஷிதாபாத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களை ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்தார். அவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடிய ராகுல் காந்தி, பீடி தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | West Bengal: Congress MP Rahul Gandhi interacts with 'beedi' workers as Bharat Jodo Nyay Yatra reaches Murshidabad. pic.twitter.com/8hczudEaNZ
— ANI (@ANI) February 1, 2024
- பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை வழங்காமல இழுத்தடிக்கிறது என மம்தா குற்றச்சாட்டு.
- மாநில அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக பேசினர்.
மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.
உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். பிப்ரவரி 1-ந்தேதிதான் கடைசி நாள் என மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்திருந்தார் மம்தா பானர்ஜி.
இந்தநிலையில் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்காவிடில் நாளை முதல் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "மத்திய அரசுக்கு பிப்ரவரி 1 வரை (இன்று) காலக்கெடு விதித்திருந்தேன். இன்றைக்குள் நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் நாளையில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். அவர்கள் நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால், அதை எப்படி பெற வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எல்லோருடைய ஆதரவையும் விரும்புகிறேன்" இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு.
- பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும் என மம்தா அறிவிப்பு.
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார்.
இரு மாநில முதலமைச்சர்களின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு முறிவு தொடர்பாக மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
இதுகுறத்து அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரசுக்கு 2 எம்.பி சீட் தருவதாக கூறியதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
காங்கிரஸோ அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்டனர். இப்போது நான் ஒரு சீட் கூட அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை.
பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும். தனித்து போராடுவோம். பாஜகவை தோற்கடிக்க எங்களால் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
- இன்று மேற்கு வங்காளத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று கொல்கத்தா மாநிலத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி மேற்கு வங்காள மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் "கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். காவல்துறையினர் இந்த சம்பவத்தை புறக்கணித்துள்ளனர். போலீசாரின் புறக்கணிப்பால் ஏராளமான விசயங்கள் நடந்திருக்கலாம். இது சிறு சம்பவம்தான்" என்றார்.
கொல்கத்தா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது குறித்து தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மக்களவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி விலகியுள்ளார்.
இதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை முதலில் எடுப்பதே கூட்டணி தர்மமாகும்.
- இதற்காக நாங்கள் 7 மாதமாக காத்திருக்கிறோம் என்றார் எம்.பி. அபிஷேக் பானர்ஜி.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என கடந்த வாரம் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை முதலில் எடுப்பதே கூட்டணி தர்மமாகும்.
இதற்காக நாங்கள் 7 மாதமாகக் காத்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
தேசிய அளவில் காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வருகிறது.
ஆனாலும் மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறி வருகிறார். இந்தக் கோரிக்கை பா.ஜ.க.வுடையதா அல்லது காங்கிரசுடையதா? எங்களுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என தெரிவித்தார்.
இதன்மூலம் காங்கிரஸ் மீது மம்தா மீண்டும் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாகக் கருதப்படுகிறது.
- வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்.
- நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், மத்திய புலனாய்வு அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பாஜக மக்களை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், குடியுரிமை (திருத்தம்) சட்டம் அல்லது சிஏஏவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூச் பெஹாரில் உள்ள உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக ராஜ்பன்ஷிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தியது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்," பாஜக, மத்திய அமைப்புகளை தேர்தலுக்கு பயன்படுத்துகிறது. பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியோரை தங்கள் வீட்டிற்கு அனுப்புவோம் என்று தொலைபேசியில் மக்களை மிரட்டுகிறது.
நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடுவதற்காக ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று நாடகம் ஆடுவதில்லை" என்றார்.
- தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
- 18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார்.
கொல்கத்தா:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு பிரச்சனையால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரும் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இதனால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பாக்டோக்ராவில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறியதாவது:-
இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. ஆங்காங்கே சில தடைகள் உள்ளன. ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுவோம். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் இணைந்து போராடும்.
18 எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் கடந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி அன்று பாட்னாவில் கூட்டினார். 2-வது கூட்டம் பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ந் தேதிகளிலும், 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி மும்பையிலும் நடந்தது.
இந்த 3 கூட்டங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததால் பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தை கடைசி வரை எதிர்த்து போராட நிதிஷ்குமாரை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.