என் மலர்
மேற்கு வங்காளம்
- பயிற்சி மருத்துவர்கள் 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சி மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதோடு, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
- பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் உண்ணாவிரதம்.
- மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் சக ஊழியர்களுக்கு ஒற்றுமையாக நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பெண் டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநில அரசுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கொல்கத்தா ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக டாக்டர்கள் சங்கம் (Federation of All India Medical Association (FAIMA)) அறிவித்தள்ளது.
"நாங்கள் மேற்கு வங்க ஜூனியர் டாக்டர்கள் முன்னணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம், எங்கள் நிலைப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளோம். விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் சக ஊழியர்களுக்கு ஒற்றுமையாக நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்." என அனைத்திந்திய மெடிக்கல் அசோசியேசன் பெடரேசன் தலைவர் சவ்ரங்கர் தத்தா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம 9-ந்தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
சுமார் 42 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்குப் பிறகு தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
- பெற்றோர் புகாரின் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம்
- காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஜாய் நகர் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை டியூஷன் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
பின்னர் தேடுதலில் இறங்கிய கிராமத்தினரால் குளத்தில் இருந்து சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி வீட்டுக்கு வரும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லபட்டதாக பெற்றோரும் ஊராரும் தெரிவிக்கின்றனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
பெற்றோர் புகாரின் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம் எனவும் வேண்டுமென்றே அவர்கள் காலதாமதம் செய்ததாகவும் குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலரால் காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர்.
இதற்கிடையில் சிறுமி கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் ஒரு நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலையாளி சிறுமிக்கு ஐஸ் க்ரீம் வாங்கிக்கொடுத்து சைக்கிளில் கடத்தியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு 3 மாதங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். மேற்கு வங்கம் நாட்டின் வன்கொடுமை தலைநகரமாக மாறியுள்ளதாக பாஜக அமைச்சர் சுகந்தா மஜூம்தார் விமர்சித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் கொலைக்கு நியாயம் கேட்டு ஜுனியர் மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.
- இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது.
பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார்.
டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக்கொண்டபடி செயல்படுத்தவில்லை எனக்கூறி ஜூனியர் டாக்டர்கள் கடந்த 1-ம் தேதி மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். அப்போது தங்கள் கோரிக்கையை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அரசிடமிருந்து எந்த பதிலும் வரைவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூனியர் டாக்டர்கள் நேற்று நள்ளிரவு முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், டாக்டர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்குவங்க அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.
- மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன.
- நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு அசைவ உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு அம்மாநில கைதிகளுக்கு சிறையில் மட்டன் பிரியாணியும் பசந்தி புலாவும் உணவாக வழங்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரியின் 9 நாட்களுக்கும் கைதிகளுக்கு இந்த புதிய உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது. துர்கா பூஜை விழாவின் போது சமையற்காரர்களாக பணிபுரியும் கைதிகளே இந்த உணவு வகைகளை சமைக்கவுள்ளார்கள்.
கைதிகளின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், விருப்பப்படும் கைதிகளுக்கு மட்டும் தான் அசைவ உணவு வழங்கப்படும் என்றும் பண்டிகை உணர்வை கைதிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது கண்களை மூடியுள்ளார்
மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன. தலைநகர் கொல்கத்தாவில் வருடந்தோறும் நவராத்திரி கொண்டாட்டத்தில் பல்வேறு விஷயங்களில் பின்னணியில் துர்கை சிலை பந்தல்கள் உருவாக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடம் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது அனைவரும் அறிந்ததே நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்டம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருந்தது.
கொல்கத்தாவிலும் இந்நாள்வரை போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு துர்கா பூஜா பந்தல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'அவமானம்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட அந்த பந்தலில் பல கைகள் கொண்ட தேவி துர்க்கை இரு கைகளால் கண்களை மறைத்தவாறு வெட்கத்தில் நிற்பதுபோல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணச் சகிக்காது அவர் கண்களை மூடுவது போல் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலைக்கு முன்பு வெள்ளைத் துணியால் பெண் மூடப்பட்டு விழுந்துகிடப்பது போன்றும், மருத்துவர்களின் உடை சுவரில் தொங்குவதுபோன்றும் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட இந்த பந்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
#Watch: A Durga Puja pandal in #Kolkata based on the theme of RG Kar Hospital incident. Organiser Biswajit Sarkar says that the theme is 'lajja' & Goddess Durga is ashamed of the incident that shook the state. pic.twitter.com/WC44jHpDgP
— Pooja Mehta (@pooja_news) October 3, 2024
- பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் வேலை நிறுத்தம்.
- மருத்துவமனையின் கட்டமைப்பு, பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வதை்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் ஒருவர் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கியது.
பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு, டாக்டர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இருந்த போதிலும் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் உள்பட தங்களது அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஜூனியர் டாக்டர் அமைப்பின் முக்கிய குழு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இன்று மதியம் நடைபெறும் பேரணிக்குப் பிறகு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான வேலை நிறுத்தம் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மாநில அரசுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு விதிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
நோயாளிகள் இன்னல்களை சந்திப்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஜூனியர் டாக்டர்களை சஸ்பெண்ட் செய்ய சீனியர் டாக்டர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்கதக்து.
ஜூனியர் டாக்டர்கள் 42 நாட்கள் முழு வேலை நிறுத்தம் செய்தனர். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர்களுடைய போராட்டம் செப்டம்பர் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அப்போது முக்கியமான மருத்துவ சேவை பாதிக்கக்கூடாது என்ற வகையில் முடிவு செய்தனர். பின்னர் அக்டோபர் 1-ந்தேதி மீண்டும் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
- அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்கு திரும்பினர்.
- தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணி புறக்கணிப்பு தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 42 நாட்களுக்கு பிறகு ஜூனியர் டாக்டர்கள், பேராட்டத்தை கைவிட்டு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்கு திரும்பினர்.
தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணி புறக்கணிப்பு தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில், அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பயிற்சி ஜூனியர் டாக்டர்கள் நேற்று முதல் மீண்டும் முழு பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். இன்றும் அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.
இதனால் மேற்கு வங்காளத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
- என்.ஐ.ஏ. சோதனை 12 இடங்களில் நடத்தப்பட்டது.
- சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக மேற்கு வங்காள என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் நேதாஜி நகர், பனிஹாட்டி, பாரக்பூர், சோடேபூர், அசன்சோல் மற்றும் பல இடங்களில் 2 பெண்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த சோதனைகள் நடைபெற்றது.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 3 டாக்டர்கள் மற்றும் 3 நர்சுகள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
- மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணியாக சென்றனர்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கற்பழிப்பு கொலை சம்பவத்தை கண்டித்தும், இதற்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டம் நடந்தது.
டாக்டர்கள் ஆஸ்பத்திரி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போராட்டங்கள் கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் சாகூர்தத்தா மருத்துவமனையில் 3 டாக்டர்கள் மற்றும் 3 நர்சுகள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மீண்டும் டாக்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்க அரசு தவறியதாக கூறி மீண்டும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை, கொல்கத்தா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணியாக சென்றனர். மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் அச்சுறுத்தல்களை எதிர் கொள்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும்.
பணியிடங்களில் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்குவதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாக கூறி டாக்டர்கள் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு எந்த ஒரு நேர்மறையான நடவடிக்கையையும் எடுக்க தவறினால் இன்று முதல் மீண்டும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
பயிற்சி டாக்டர் கொலை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணைக்கு வர உள்ள நிலையில் டாக்டர்கள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
- சந்தீப் கோஷ் மீதான குற்றச்சாட்டின் தன்மை மோசமாக உள்ளது.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஜாமின் மறுத்த சிபிஐ நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டின் தன்மை நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமின் கோரி சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டல் ஆகியோர் மனு தாக்கல் செய்தனா். இவா்களின் மனு மீது கடந்த வாரம் விசாரணை மேற்கொண்ட கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் எஸ்.டே கூறுகையில், 'பெண் மருத்துவா் கொலை தொடா்பான சிபிஐ விசாரணை முழு வீச்சில் நடைபெறுவது வழக்கு குறிப்பேடு மூலம் தெரிகிறது. சந்தீப் கோஷல் மீதான குற்றச்சாட்டின் தன்மை மோசமாக உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடும்' என்று தெரிவித்து சந்தீப் கோஷ், அபிஜீத் மோண்டலின் ஜாமின் மனுக்களை நிராகரித்தார்.
கடந்த மாதம் அரசு நடத்தும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரங்களை சேதப்படுத்தியதாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்ததாகவும் கோஷ் மற்றும் தலா காவல் நிலையத்தின் முன்னாள் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
- சத்தம் கேட்டு ஓடி வந்த மிதுன் மாட்டை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார்.
- மிதுனின் கூச்சல் கேட்டு, தோட்டத்து குடிசையில் தங்கியிருந்த அவரது தந்தை ஓடிவந்தார்.
ஜல்பைகுரி:
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ளது தகிரிமாரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த மிதுன் (வயது 30) என்பவர் வயலில் நேற்று தனது பசுவை மேய விட்டிருந்தார். அப்போது அருகில் தேங்கியிருந்த தண்ணீரில் மாடு இறங்கியது. அதில் மின்கம்பி அறுந்து கிடந்ததாக தெரிகிறது.
மின்சாரம் தாக்கியதால் மாடு அலறி கதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த மிதுன் மாட்டை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பலியானார்.
மிதுனின் கூச்சல் கேட்டு, தோட்டத்து குடிசையில் தங்கியிருந்த அவரது தந்தை பரேஷ் தாஸ்(60) ஓடிவந்தார். அவசரமாக அவரும் தண்ணீரில் இறங்கியதால் அவரும் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி தீபாலி(55), மிதுனின் 2 வயது குழந்தை சுமனை கையில் தூக்கியபடி அவர்களை காப்பாற்ற சென்றார். அவரும் மின்சாரம் தாக்கி பலியானார்.
இந்த சோகம் நிகழ்ந்தபோது, மிதுனின் மனைவி மட்டும் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.