search icon
என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவாகியுள்ளது.

    அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், நிலநடுக்கம் எதிரொலியால் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டிடங்களில் சில லிஃப்ட்கள் ஐந்து மணி நேரம் வரை நிறுத்தப்பட்டன.

    சிபா மற்றும் கனகாவா மாகாணங்களில் ஏழு பேர் லேசான காயம் அடைந்ததாக தீயணைப்புத் துறைகள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர் வீட்டிலேயே விழுந்து காயமடைந்துள்ளனர். மேலும், ஒருவரின் தலையில் மின் விளக்கு விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

    • ஜப்பானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்ததாகவும், 22 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டோக்கியோ:

    உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

    இதில் முதல் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பயந்து போன அவர்கள் பாதுகாப்பு கருதி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இதனால் ஏற்பட்ட பீதி தணிவதற்குள் இரண்டாவது முறையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த முறை கடலுக்கு அடியில் சுமார் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக இருந்ததால் இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கடுமையான அதிர்வினை உணர்ந்தனர். இதனால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

    எனினும் சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் சரிந்து விழுந்தன. அப்போது இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சேத விவரங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஜப்பானில் சுமார் 120 மி.மீ. வரை கடுமையான மழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    • தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரதமரின் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைநகர் டோக்கியோவில் பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் துப்பாக்கி சத்தம் கேட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள கழிப்பறை அருகே போலீஸ்காரர் ஒருவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரதமரின் அலுவலகத்திலேயே போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது பிரதமர் புமியோ கிஷிடா தனது அலுவலகத்தில் இல்லை. அவர் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பானில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

    டோக்கியோ:

    ஜப்பானின் மத்திய பகுதியில் இஷிகவா நகரின் ஹோன்ஷு தீபகற்பத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    • ஹக்குடோ விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
    • இதற்குமுன் சந்திரனில் தனியார் நிறுவனங்களின் விண்கலங்கள் தரையிறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    டோக்கியோ:

    ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளன.

    இதற்கிடையே, ஐ ஸ்பேஸ் நிறுவனத்தின் ஹக்குடோ என்ற விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

    கடந்த மாதம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம், 100 கிலோமீட்டர் உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் சந்திரனில் தரையிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சந்திரனில் தரையிறங்குவதற்கு முன் அந்த விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தரையிறங்கிய போது அந்த விண்கலம் மோதி நொறுங்கியது. இதன்மூலம் சந்திரனில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என விண்கலத்தைச் செலுத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2019-ல் இஸ்ரேலைச் சேர்ந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய போது மோதி நொறுங்கி அழிந்தது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
    • ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    டோக்கியோ:

    வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

    சமீபத்தில் ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஏவுகணை ஜப்பான் பகுதிக்குள் விழவில்லை.

    இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும், ஏவுகணை இடைமறிப்பு கருவிகளை செயல்படுத்தவும் தயாராக இருக்கும்படி ராணுவத்துக்கு ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஜப்பான் மந்திரி யசுகாசு ஹமாடா, ராணுவத்திடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கைகாசாகி துறைமுகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
    • பிடிபட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று வாகயாமா மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.

    உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கைகாசாகி துறைமுகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    அவரை பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சூழந்து இருந்தனர். அப்போது அவர் பேச தொடங்குவதற்கு முன்பு கூட்டத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் பிரதமர் புமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டை வீசினார்.

    அந்த குண்டு, புமியோ கிஷிடா அருகே விழுந்தது. இதில் குண்டு வெடித்து புகை மூட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடினார்கள். உடனே பிரதமர் புமியோ கிஷிடாவை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

    மேலும் குண்டை வீசிய மர்ம நபரை மடக்கி பிடித்தனர். தப்பி ஓட முயன்ற அவரை கீழே தள்ளி பிடித்து அங்கிருந்து கொண்டு சென்றனர். பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக இருக்கிறார்களா? மர்ம பொருள் ஏதாவது இருக்கிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது. குண்டு வீசிய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

    அது தொடர்பாக விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பிடிபட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசி கொண்டிருந்தபோது அவா் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

    இந்த நிலையில் பலத்த பாதுகாப்பை மீறி ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் நான்கு ரோந்து கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    டோக்கியோ:

    ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று மாலையில் காணாமல் போனது. UH-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகாப்டர், மியாகோ தீவு அருகே சென்றபோது ரேடாரில் இருந்து மறைந்தது. இதனால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு ரோந்து கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

    • ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

    டோக்கியோ:

    ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் நேற்று முன்தினம் டஜன் கணக்கான கோழிகள் செத்தன. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பண்ணையில் இருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க பண்ணையில் உள்ள 5 லட்சத்து 58 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
    • கடும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    • பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.
    • கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பறவைக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக இந்த பண்ணையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதும், இதன் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
    • துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பள்ளி ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

    ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

    அப்போது பள்ளிக்கூடத்தில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசவுகரியமாக உணர்ந்தனர்.

    துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பள்ளி ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோதே, மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.

    அதை தொடர்ந்து இந்த துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்கள் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×