என் மலர்
ஜப்பான்
- ஜப்பானுக்கு அடுத்த நிலையில் இத்தாலியும், பின்லாந்தும் உள்ளன
- குழந்தை பெற்று கொள்ள ஜப்பானிய தம்பதியினர் தயங்குகின்றனர்
கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக அந்நாட்டில், 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரியவந்துள்ளது.
உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மேலே இருப்பதால் பொருளாதாரத்திலும், அதிகரிக்கும் நாட்டின் சமூக பாதுகாப்பிற்கான செலவினங்களிலும் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.
1970 காலகட்டங்களில் 20 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு அந்நாட்டில் கடந்த வருட தரவுகளின்படி 8 லட்சத்திற்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது.
ஜப்பானிய நிறுவன பணியிடங்களில் ஊழியர்களுக்கான வேலை பார்க்கும் நேரம் மிக அதிகம். மேலும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவினங்கள் மிக அதிகம். இக்காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெற்று கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்தாலும், மக்கள் தயங்குகிறார்கள்.
ஒரு கட்டமைப்புள்ள சமூகமாக இயங்கும் ஆற்றலை ஜப்பான் இழந்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஃப்யுமியோ கிஷிடா கடந்த ஜனவரியில் தெரிவித்தார். இச்சிக்கலை விரைவாக சரி செய்யும் நடவடிக்கைகளை அந்நாடு எடுக்க வேண்டும் என மனிதவள மேலாண்மை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், 2021 ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி வயதானவர்களின் ஜனத்தொகை 10.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராக்கெட்டில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய எக்ஸ்ரே தொலை நோக்கியும் அனுப்பப்பட்டு உள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
இந்த விண்கலத்தை எச்.2-ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ராக்கெட் ஏவுதல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்லிம் விண்கலத்தை இன்று விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
4 அல்லது 6 மாதங்களில் விண்கலம் நிலவை சென்றடையும் என்றும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் சிறிய ரக லேண்டர் உள்ளது.
இந்த ராக்கெட்டில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய எக்ஸ்ரே தொலை நோக்கியும் அனுப்பப்பட்டு உள்ளது.
ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்கு பிறகு எக்ஸ்ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ் கோபி மிஷன் என்ற செயற்கை கோள் பூமியின் சுற்று வட்ட பாதையில் செலுத்தப்பட்டது. இது விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ளவற்றின் வேகத்தையும் ஆராயும். இந்த தகவல் மூலம் வான் பொருட்கள் உருவானது எப்படி என்பதை கண்டறிய உள்ளோம். மேலும் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்ற மர்மத்தை தீர்க்க வழி வகுக்கும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்கான இத்திட்டத்தில் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5-வது நாடாக ஜப்பான் இருக்கும். ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது விண்கலங்களை நிலவில் தரையிறக்கி உள்ளன.
- பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
- வரலாற்று ரீதியாக சர்வதேச சட்டத்தின் கீழும் சென்காகு தீவுகள் ஜப்பானுக்கு சொந்தமானது.
டோக்கியோ:
சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் இணைந்து வரை படம் இருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல் சீனா தனது வரைபடத்தில் தென் சீன கடல் பகுதிகள் சிலவற்றையும் இணைத்தது. இதற்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு தெரித்து உள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள சென்காகு தீவுகள் சீனா வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அவை சீனப் பெயரான டியாயு தீவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து ஜப்பான் அரசின் தலைமை செயலாளர் ஹிரோகாசு மட்கனோ கூறும்போது, ஜப்பானுக்கு சொந்தமான சென்காகு தீவை சீனா தனது வரை படத்தில் இணைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அந்த வரை படத்தை திரும்ப பெற வலிறுத்தி உள்ளோம். வரலாற்று ரீதியாக சர்வதேச சட்டத்தின் கீழும் சென்காகு தீவுகள் ஜப்பானுக்கு சொந்தமானது. இவ்விவகாரத்தில் அமைதியாக மற்றும் உறுதியான வழியில் ஜப்பான் பதிலளிக்கும் என்றார். ஆனால் ஜப்பானின் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சீனா அறிவித்துள்ளது.
- சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைபர் பட்டை எனப்படுகிறது.
- சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் இருந்து வேறுபட்டது.
டோக்கியோ:
இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவைகளை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் தகாஷி இடோ ஆகியோரின் சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த கிரகம் பூமி போன்று இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைபர் பட்டை எனப்படுகிறது. இது பனி பொருட்கள் நிறைந்த இடம் என கருதப்படுகிறது.
இது 9-வது கிரகத்தை விட மிக அருகில் உள்ளது. ஆரம்பகால சூரிய குடும்பத்தில் இதுபோன்ற பல கோள்கள் இருந்ததால், ஒரு ஆதி கோளாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
கைபர் பெல்ட்டில் மில்லியன் கணக்கான பனிக்கட்டி பொருட்கள் இருப்பதாக அறியப்படுகிறது, அவை நெப்டியூனுக்கு அப்பால் அமைந்துள்ளதால் அவை டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது . இவை சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியவை என்று வானியலாளர்கள் நம்புகின்றனர்.
அவை பாறை, உருவமற்ற கார்பன் மற்றும் நீர் மற்றும் மீத்தேன் போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளின் கலவைகளால் ஆனவை.
"டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்களின் சுற்றுப்பாதைகள் வெளிப்புற சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாத கிரகம் இருப்பதைக் குறிக்கலாம்" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பாறை மற்றும் பனி உடல்கள் வெளிப்புற சூரிய மண்டலத்தில் கிரக உருவாக்கத்தின் எச்சங்கள். அருகாமையில் உள்ள ஏதோ ஒரு பெரிய ஈர்ப்பு விசை இந்த பொருட்களில் ஈர்க்கப்பட்டு, அவற்றுக்கு "விசித்திரமான சுற்றுப்பாதைகள்" வழங்குவதை ஆராய்ச்சி குழு கவனித்தது.
இந்த கிரகம் ஏற்கனவே சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் இருந்து வேறுபட்டது. இது மிகவும் பெரியது என்பதால் தொலைதூர சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இது நெப்டியூனை விட சூரியனில் இருந்து 20 மடங்கு தொலைவில் சுற்றி வருகிறது. இருப்பினும் இன்று வரை வானியலாளர்கள் 9 கிரகம் இருப்பதாக மட்டுமே கூறி உள்ளனர்.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், 450 கோடி வருடங்களுக்கு முன்பு நமது சூரியன் உருவாகியது சூரியன் உருவாகிக் கொண்டிருந்தபோது அதனை சுற்றி சுழன்று கொண்டிருந்த தூசுக்களும் வாயுக்களும் விண்கற்களும் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த மோதலின் காரணமாகவே சூரியத்தொகுதியில் உள்ள 8 கோள்களும் அதன் துணைக்கோள்களும் உருவானது.
இப்படி நடந்த மோதலில் ஒன்றுடன் ஒன்று மோதிய அனைத்து பொருட்களும் கோள்களாக மாறவில்லை. மீதம் இருந்த அனைத்தும் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கின்றன. இப்படி எஞ்சிய பொருட்கள் சூரியத் தொகுதியின் உள்ளே சிறுகோள் பட்டை எனும் பகுதியில் சூரியனைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றன.
இந்த சிறுகோள் பட்டை போன்றே நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் காணப்படும் சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விண்கற்களின் அமைப்பே கைப்பர் பட்டை ஆகும்.
கைப்பர் பட்டையில் உள்ள மிகப்பெரிய கோளான புளூட்டோ 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் கைப்பர்பட்டையை விஞ்ஞானிகளால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் புளூட்டோவை போன்று அதில் உள்ள ஏனைய பொருட்கள் எதுவும் சூரியஒளியை பிரதிபலிக்கவில்லை. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாவே கைப்பர் பட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த கைப்பர் பட்டை பகுதியில்தான் பூமி போன்ற கிரகம் இருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படவேண்டியது அவசியம். நாங்கள் கண்டுபிடித்திருப்பது எல்லோரும் கூறிவரும் 9-வது கிரகம் அல்ல. சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் உள்ளது என்கின்றனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.
சூரியனில் இருந்து இந்த புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவில் உள்ளது. ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரமாகும். ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த தகவல் வானியல் அறிஞர்களின் அடுத்தகட்ட தேடுதலுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.
- கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கடல்வகை உணவுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது 90 சதவீதம் குறைந்தது.
டோக்கியோ:
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுநீரானது பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளான சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து சீனா உத்தரவிட்டது. இதனால் கடல்வகை உணவுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது 90 சதவீதம் குறைந்தது.
இந்தநிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா டொயோசுவில் உள்ள மீன்சந்தைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சீனாவின் இந்த தடையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவுவதாக அவர் உறுதியளித்தார். இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜப்பானின் கடல் வகை உணவுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை கடல் உணவு வகைகளை உள்நாட்டில் மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என புமியோ கிஷிடா வலியுறுத்தினார்.
- கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது
- சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்த கடலில் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது.
அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. இதற்கான சுத்திகரித்து அவற்றை பேரல்களில் சேமித்து வைத்திருந்தது. ஆனால், மீனவர்கள் மற்றும் சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஜப்பான் பெற்றது.
இதனால் இன்று முதல் (ஆகஸ்ட் 24) சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று முதல் பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது. அணுஉலை நிலையத்தின் கட்டுப்பாடு அறையில் இருந்து லைவ் வீடியோ மூலம் தண்ணீர் திறந்து விடப்படும் காட்சி வெளியானது. அதில் முக்கிய ஆபரேட்டர் ஒருவர், "கடல் நீர் வெளியேற்றப்படும் பணி செயல்படுத்தப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்தது.
- அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
டோக்கியோ:
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரியா சந்தேகத்திற்கு இடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது என ஜப்பான் பிரதமர் அலுவலகம் டுவீட் செய்துள்ளது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் கியோடோ நிறுவனம், டோக்கியோவில் உள்ள அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து கொண்டிருந்ததாகக் கூறியது.
இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு தயார் நிலையில் இருப்பது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- புகுஷிமாவில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்க கடல் நீர், போரிக் அமல் பயன்படுத்தப்பட்டது
- 2011-ல் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் புகுஷிமாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.
மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும் கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.
ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் வருகிற 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வருகிற 24-ந்தேதி வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பானில் ஹாக்கிடோ என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
- சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்ய முடியும்
- உள்ளூர் மீனவர் அமைப்புகளும், சீனாவும், தைவானும் எதிர்க்கிறது
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது. மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும், கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது.
இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.
ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் ஜப்பானிய அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, இம்மாத பிற்பகுதியில் கடலில் வெளியிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஆகியோருடன் அடுத்த வாரம் அமெரிக்காவில் தனது சந்திப்புகளை முடித்த பிறகு, சுமார் 1.3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கும்.
ஜப்பானிய தலைவர், இரு நாட்டு தலைவர்களுக்கும் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன்.
- உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் ஓநாய் போன்ற தோற்றத்தில் ஒருவர் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டோருஉவேடா என்ற அந்த என்ஜினீயருக்கு சிறு வயது முதலே ஓநாய்கள் மீது அதிக பற்று உண்டாம்.
எனவே தானும் ஓநாயை போல மாற வேண்டும் என ஆசைப்பட்ட அவர் இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் செலவு செய்து ஓநாய் போன்ற தோற்றத்தில் ஆடையை வடிவமைத்து பெற்றுள்ளார். ஓநாய் உடையில் அவர் நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து உவேடா கூறுகையில், நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன். வேலை மற்றும் பிற விசயங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் மறக்க இது உதவுகிறது. இந்த உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது. கண்ணாடியில் இந்த உடையை பார்க்கும் போது நான் ஒரு ஓநாயை பார்ப்பது போலவே உள்ளது என்றார்.
- ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது.
- இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.
இதில் அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.