search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஓநாய் போன்ற தோற்றத்திற்காக ரூ.20 லட்சம் செலவு செய்த என்ஜினீயர்
    X

    ஓநாய் போன்ற தோற்றத்திற்காக ரூ.20 லட்சம் செலவு செய்த என்ஜினீயர்

    • நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன்.
    • உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது.

    ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்நிலையில் ஓநாய் போன்ற தோற்றத்தில் ஒருவர் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டோருஉவேடா என்ற அந்த என்ஜினீயருக்கு சிறு வயது முதலே ஓநாய்கள் மீது அதிக பற்று உண்டாம்.

    எனவே தானும் ஓநாயை போல மாற வேண்டும் என ஆசைப்பட்ட அவர் இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் செலவு செய்து ஓநாய் போன்ற தோற்றத்தில் ஆடையை வடிவமைத்து பெற்றுள்ளார். ஓநாய் உடையில் அவர் நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து உவேடா கூறுகையில், நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன். வேலை மற்றும் பிற விசயங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் மறக்க இது உதவுகிறது. இந்த உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது. கண்ணாடியில் இந்த உடையை பார்க்கும் போது நான் ஒரு ஓநாயை பார்ப்பது போலவே உள்ளது என்றார்.

    Next Story
    ×