என் மலர்
செய்திகள்
X
இரட்டை இலையை யாருக்கு ஒதுக்கினால் என்ன?: அ.தி.மு.க. முதல் வேட்பாளர் மாயத்தேவர் விரக்தி
Byமாலை மலர்24 Nov 2017 9:57 AM IST (Updated: 24 Nov 2017 9:57 AM IST)
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்கினால் என்ன? என்று அ.தி.மு.க. முதல்வேட்பாளர் மாயத்தேவர் கூறினார்.
திண்டுக்கல்:
எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கிய சிறிது காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் வக்கீல் மாயத்தேவர் போட்டியிட்டார். இவர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர்.
தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட முதல் வேட்பாளர் மாயத்தேவர்தான். அவரை ஆதரித்து எம்.ஜி.ஆர். திண்டுக்கல் தொகுதியில் வீதிவீதியாக பிரசாரம் செய்தார். சின்னம் ஒதுக்குவதற்கான வேட்பாளர்கள் கூட்டத்தில் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்தார். அப்போது இரட்டை இலை சின்னம் சுயேச்சைகளுக்கான பட்டியலில் இருந்தது.
அப்போது மாயத்தேவர் எம்.ஜி.ஆரிடம் கூறுகையில் இரட்டை இலை வெற்றியின் அடையாளத்தை குறிப்பது போல் இருக்கிறது. இந்த சின்னத்தை சுவரில் வரைவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். அதனால்தான் இரட்டை இலையை தேர்ந்து எடுத்தேன் என்றார்.
இந்த தேர்தலில் மாயத்தேவர் வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு வயது 85.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை இலை முடக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. கட்சியை காப்பாற்ற சசிகலாவை தவிர வேறு வழி இல்லை என கருத்து தெரிவித்து இருந்தார்.
தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது யாருகிட்டேயும் கொடுத்துட்டு போறாங்க, இனிமேல் யாருக்கு ஒதுக்குனா என்ன? இனி என்ன இருக்கு. எல்லாம் முடிஞ்சு போச்சு என்று விரக்தியாக கூறினார்.

Next Story
×
X