என் மலர்
செய்திகள்
X
துணை வேந்தர் ஊழல்: ஆளுநர் மீது பழிபோட அமைச்சர் முயற்சி- ராமதாஸ்
Byமாலை மலர்6 Feb 2018 2:31 PM IST (Updated: 6 Feb 2018 2:31 PM IST)
துணை வேந்தர் நியமனத்துக்கும் கல்வித்துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் கூறியிருப்பது ஆளுநர் மீது பழி போடும் முயற்சி என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூரில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எடப்பாடி அரசு பதவி பேற்று ஓராண்டுக் கூட நிறைவடைவில்லை. இந்த ஆட்சியில் ஊழல் தவிர வேறு ஏதும் இல்லை. ஓராண்டில் தமிழக மக்கள் அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளனர்.
அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. இதுவே, எடப்பாடி அரசின் சாதனை. ஓராண்டு ஆட்சியில் தமிழகம் ஒரு நூற்றாண்டு பின் தங்கி உள்ளது. இந்த ஓராண்டில் பல செயல்கள், காரியங்கள் செய்திருக்கலாம்.
ஆனால், ஊழல் மட்டுமே உச்சக்கட்டத்திற்கு நடந்துள்ளது. முதல்-அமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஊழல் செய்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் ஆட்சி நீடிக்கும் என்பது தெரியாததால் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
குட்கா, வாக்கி டாக்கி வாங்கியது சத்துணவு பணியாளர்கள் நியமனம் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமனம், டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ காப்பீடு என எல்லாவற்றிலும் ஊழல் நடந்துள்ளது.
பல்கலை கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்திலும் ஊழல் நடந்துள்ளது. 25 வகையான ஊழல் குறித்து ஆளுநரிடம் 2 மாதங்களுக்கு முன்பே பா.ம.க. சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 100 மடங்கு உயர்த்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. ரேசன் கடைகளில் சக்கரை விலையை உயர்த்தியுள்ளது. உளுந்து பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு மோசமாகியுள்ளது. கள்ளத்துப்பாக்கி விற்கும் மாநிலமாகவும், சந்தையாகவும் தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதை பொருட்கள் தலை விரித்தாடுகிறது.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் தான் போதை பொருட்கள் அதிகளவில் உள்ளது. இது போலீசாருக்கு தெரியும். ஆனால் கண்டும் காணாமலும் உள்ளனர்.
தமிழக உரிமைகள் தாரை வார்க்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் என்ஜினீயரிங், மருத்துவம் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகள் ‘நுழையா’ தேர்வுகளாக உள்ளது.
ஓராண்டுக்கு முன்பு ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சட்டம் இயற்றப்படும் என்று கூறிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இனியும் இந்த ஆட்சி இருக்க கூடாது. எவ்வளவு சீக்கிரம் அகற்றப்படுகிறதோ அவ்வளவிற்கு மக்களுக்கு நல்லது. எதிர் கட்சியான தி.மு.க. தூங்குகிறது. பா.ம.க. பிரதான எதிர் கட்சியாக தட்டி கேட்கிறது.
கோவை பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதியின் ஊழல் பற்றி அதிர்ச்சிகர தகவல்கள் வருகிறது. 20 பேராசிரியர்கள் துணை வேந்தர் கணபதிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.
64 பேராசிரியர்களை பணம் பெற்றுக் கொண்டு துணை வேந்தர் நியமனம் செய்துள்ளார். அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். பேராசிரியர்களை தேர்வுக் குழு தேர்வு செய்ய வேண்டும். தேர்வுக்குழுவுக்கே பணம் கொடுத்துவிட்டு துணை வேந்தர் கணபதி தனக்கு வேண்டியவர்களை பணி நியமனம் செய்துள்ளார்.
எனவே, துணை வேந்தர் கணபதிக்கு உடந்தையாக இருந்த தேர்வுக் குழு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக் கழகங்களிலும் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது.
பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் மட்டும் சிக்கிக் கொண்டார். மற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் சிக்கவில்லை. எனவே, அனைத்து பல்கலை கழக ஊழல் குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இதற்கு முன்னாள் இருந்த துணை வேந்தர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். பல்கலைக் கழக ஊழல் வழக்குகளை விசாரிக்க மதுரை மற்றும் சென்னையில் தனி கோர்ட்டு அமைத்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும்.
ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். துணை வேந்தர் கணபதி ஊழலில் அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பழகன், துணை வேந்தரை ஆளுநர் தான் நியமிப்பார். துணை வேந்தர் நியமனத்துக்கும் கல்வித்துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளது ஆளுநர் மீது பழி போட முயற்சிப்பதாக தெரிகிறது. அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது.
பல்கலைக்கழக பணி நியமன ஊழல் குறித்து ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். அதுசம்பந்தமாக விசாரிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மணல் குவாரிகள் மூலம் 35 ஆயிரம் கோடி கையூட்டல் செய்கின்றனர்.
அதற்காகவே மணல் குவாரிகளை 6 மாதத்திற்கு மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சென்று இடைக்கால தடை பெற்றுள்ளனர். இருசக்கர வாகன மானிய திட்டத்திலும் தரகர்கள் மூலம் ஒவ்வொரு பயனாளிகளிடமும் ரூ.10 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு ஊழல் செய்கின்றனர்.
கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். ரூ.1700 கோடி நிலுவை தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க வேண்டும். திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை மாணவனே கத்தியால் குத்தியுள்ளான்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாணவர்களுக்கு நீதி போதனைகள் அளிக்க வேண்டும். கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews

Next Story
×
X