என் மலர்
ஐ.பி.எல்.

X
திண்டிவனம் தொகுதி
திண்டிவனம் தொகுதி கண்ணோட்டம்
By
மாலை மலர்18 March 2021 6:22 PM IST (Updated: 18 March 2021 6:22 PM IST)

திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள பி. சீதாபதி சொக்கலிங்கம் மீண்டும் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில் அர்ஜூனன் களம் காண்கிறார்.
சொத்து மதிப்பு
அர்ஜூனன்
1. கையிருப்பு- ரூ. 50 ஆயிரம்
2. அசையும் சொத்து- ரூ. 30,70,697
3. அசையா சொத்து- ரூ. 90,40,000
1951-ம் ஆண்டு திண்டிவனம் தொகுதி உருவானது. திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள், ஒலக்கூர் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், மயிலம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு இத்தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

பொது தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு முதல் தனித்தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரங்களில் திண்டிவனமும் ஒன்று. தமிழகத்தின் முதல் முதல்-அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியில் உள்ளது. தமிழக அரசு அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது.
இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக உடையார், நாயுடு, ரெட்டியார், செட்டியார் மக்களும் அதிகம் வசிக்கும் தொகுதியாக உள்ளது. அதுபோல் முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்களும் பரவலாக வசிக்கின்றனர்.

1951-ம் முதல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வரை இத்தொகுதியில் தலா 5 முறை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது.
வாக்காளர்கள்
ஆண்- 1,09, 755,
பெண்- 1,10,088
திருநங்கைகள்- 25
மொத்த வாக்காளர்கள்- 2,19 868
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:-
திண்டிவனம் வட்டம் கூச்சிகொளத்தூர், பாதிரி, கம்பூர், கரிக்கம்பட்டு, ஓங்கூர், அன்னம்பாக்கம், காட்டுப்பூஞ்சை, வடகளவாய், கடவம்பாக்கம், ஆவணிப்பூர், பனையூர், பாங்கொளத்தூர், நங்குணம், நல்லாத்தூர், சாரம், சாலவாதி, மேல்பேட்டை, விட்டலாபுரம், கீழ்கூடலூர், ஈச்சேரி, நொளம்பூர், மங்களம், கீழ் ஆதனூர், பள்ளிப்பாக்கம், எப்பாக்கம், அண்டப்பட்டு, கீழ்பசார், ஆட்சிப்பாக்கம், நாரமகனி, சேந்தமங்கலம், நல்லூர், பந்தாடு, நாகல்பாக்கம், ராயநல்லூர், நகர், அசப்பூர், குரும்பரம் (ஆர்.எப்), கந்தாடு, வட அகரம், புதுப்பாக்கம், குரும்பகம், ஆலந்தூர், வட கொடிப்பாக்கம், சிறுவடி, வைடப்பாக்கம், வட நெற்குணம், கிழ்நெமிலி, வண்டாரம்பூண்டி, கீழ்மண்ணூர், கருப்பூர், கீழ்சேவூர், கீழ்சேவூர் (ஆர்.எப்), கட்டளை, எண்டியூர், ஆத்தூர், வட குலப்பாக்கம், மானூர், மொளசூர், குருவம்மாபேட்டை,

ஜானகிபேட்டை, பெருமுக்கல், கீழருங்குணம், வடகொளப்பாக்கம், சேணலூர், கீழ்பூதேரி, குண்ணப்பாக்கம், தென்னம்பூண்டி, மண்டபெரும்பாக்கம், மடவந்தாங்கல், ஏந்தூர், குரூர், வேப்பேரி, முருக்கேரி, கொளத்தூர், நடுக்குப்பம், கேசவநாயக்கம்பாக்கம், திருக்கனூர், ஊரணி, ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பணிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, ஓமிப்பேர், அடசல், ஆடவல்லிக்குட்டம், சாத்தமங்கலம், சிங்கநந்தை, ஆலங்குப்பம், மானூர், வன்னிபேர், பிரம்மதேசம், அரியந்தாங்கல், சொக்கந்தாங்கல், நல்முக்கல், அழகியபாக்கம், டி.நல்லாளம், கீழ்சிவிரி,

பழமுக்கல், எலவளைப்பாக்கம், தென்நெற்குணம், கோவடி, ஓமந்தூர், அன்னம்புத்தூர், வரகுப்பட்டு, எரையானூர், கரணாவூர், ஜக்கம்பேட்டை, சிங்கனூர், தென்பசியார், அவனம்பட்டு, தென்களவாய், வேங்கை, கீழ்சித்தாமூர், சொரப்பட்டு, செய்யாங்குப்பம், செட்டிகுப்பம், கூனிமேடு, அரியாங்குப்பம், வெளியனூர், கள்ளகொளத்தூர், கீழ்பேரடிக்குப்பம், கீழ் எடையாளம், கீழ்ப்புதுப்பட்டி, ஓலக்கூர், கீழ்பாதி, மற்றும் ஓலக்கூர் மேல்பாதி ஆகிய கிராமங்கள் உள்ளன.

கோரிக்கைகள்
திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும், மரக்காணத்தில் உப்பள தொழிலாளர்களின் வாழ்வதாரத் தை காத்திட இந்த பகுதியில் உப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும். கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1962 தங்கவேலு (தி.மு.க.)
1967. இராமமூர்த்தி (காங்கிரஸ்)
1971 இராசாராம் (தி.மு.க.)
1977 இராசாராம ரெட்டி (காங்கிரஸ்)
1980 தங்கமணி கவுண்டர் (காங்கிரஸ்)
1984 டி.கே. தங்கமணி (காங்கிரஸ்)
1989 ஆர். மாசிலாமணி (தி.மு.க.)
1991 எசு. பன்னீர்செல்வம் (காங்கிரஸ்)
1996 சேதுநாதன் (தி.மு.க.)
2001 சி.வி. சண்முகம் (அ.தி.மு.க.)
2006 சி.வி. சண்முகம் (அ.தி.மு.க.)
2011 அரிதாஸ் (அ.தி.மு.க.)
2016- சீத்தாபதி சொக்கலிங்கம் (திமுக)
Next Story
×
X