என் மலர்
வணிகம் & தங்கம் விலை
அதானி வில்மரின் மொத்த பங்குகளையும் ரூ. 17 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யும் அதானி
- அதானி வில்மர் நிறுவனத்தில் அதானிக்கு 43.94 சதவீத பங்குகள் உள்ளன.
- இந்த அனைத்து பங்குகளையும் வில்மர் நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடிவு.
சமையல் எண்ணெய் (Fortune) கோதுமை மாவு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக அதானி வில்மர் திகழ்ந்து வருகிறது.
சிங்கப்பூர் பார்ட்னருடன் இணைந்து இந்த நிறுவனத்தை அதானி குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் 43.94 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்துள்ளது. தற்போது இந்த 43.94 சதவீது பங்குகளையும் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
வில்மர் சர்வதேச (Wilmar International) நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது. குறைந்தபட்ச பொது பங்குதாரர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 13 சதவீத பங்குகளை பொது வெளியில் விற்பனை செய்ய இருக்கிறது.
31.06 சதவீத பங்குகளை வில்மருக்கு விற்பனை செய்வதன் மூலம் (ஒரு பங்கின் விலை 305 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது) அதான் என்டர்பிரைசர்ஸ் லிமிடெட்டிற்கு 12,314 கோடி ரூபாய் கிடைக்கும். OFS மூலம் பங்குகளை விற்பனை செய்வது மூலம் என மொத்தமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 17,100 கோடி ரூபாய்) கிடைக்கும்.
இதன் மூலம் அதானி வில்மரில் இருந்து அதான் என்டர்பிரைசர்ஸ் முழுமையாக வெளியேறும். அதானி வில்மர் லிமிடெட்டில் இருந்து அதானி பரிந்துரை செய்த டைரக்டர்கள் பதவி விலக உள்ளனர்.
அதானி வில்மரில் இருந்து முழுமையாக வெளியேறும் நடவடிக்கை அடுத்த வருடம் மார்ச் 31-ந்தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நீதிமன்றம் அதானி மீது குற்றச்சாட்டிய நிலையில், அதானி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்கு மாற்றம் இதுவாகும்
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.
அதானி வில்மர் நிறுவனம் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமையல் எண்ணெய், கோதுமை மாவு, பருப்புகள், அரசி, சர்க்கரை ஆகியவற்றை விற்பனை செய்கிறது. நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 23 ஆலைகள் உள்ளன.