என் மலர்
வணிகம் & தங்கம் விலை
இந்தியாவின் ஏற்றுமதி 800 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனையை எட்டும்: மத்திய அமைச்சர்
- 2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 800 பில்லியன் அமெரிக்க டாலராக என்பதை எட்டும்.
- உள்நாட்டு தட்டுப்பாடு, அதிக அளவிலான தேவை காரணமாக பருப்பு, சமையல் எண்ணெய் இறக்குமதி தவிர்க்க முடியாதது.
2024-2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 800 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனையை எட்ட வாய்ப்புள்ளது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
"கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வருடமும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி இருக்கும். இந்திய வரலாற்றில் முதன்முறையாக 800 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி என்ற சாதனையுடன் இந்த வருடத்தில் (20224-2025) நாம் நிறைவு செய்வோம்" என பியுஷ் கோயல் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்துள்ளார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா, "இது சரியான தரவுகள் இல்லை. இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து கொண்டு வருகிறது" என்றார்.
அதற்கு கோயல் "இது தொடர்பாக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பல மாதங்களாக 600 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகம் என்ற வகையில் குறையாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது" என்றார்.
மேலும், பெட்ரோலியம் பொருட்கள், பருப்புகள், சமையல் எண்ணெய் போன்றவை உள்நாட்டு தட்டுப்பாடு, அதிக அளவிலான தேவை காரணமாக இறக்குமி செய்யப்படுவது தவிர்க்க முடியாதது.
ஒரு குறிப்பிட்ட துறையில் இறக்குமதிகள் அதிகரிக்கும்போது, தொழில்கள் அந்தத் துறையை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. அது வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளுக்கும், அதிக முதலீட்டிற்கும் வழிவகுக்கும்" என்றார்.