search icon
என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    610 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்த மும்பை பங்குச் சந்தை
    X

    610 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்த மும்பை பங்குச் சந்தை

    • இரண்டு நாட்களில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1350 புள்ளிகள் உயர்வு.
    • இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 462 புள்ளிகள் உயர்வு.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்வை சந்தித்தன.

    நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் உயர்ந்து 73,730.23 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 610 புள்ளிகள் உயர்ந்து 74,340.09 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 73730.23 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் இன்று சுமார் 600 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 74,390.80 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 73,415.68 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 609.87 புள்ளிகள் உயர்ந்து 74340.09 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்று 254.65 புள்ளிகள் உயர்ந்து 22,337.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று சுமார் 140 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது, இன்று அதிகபட்சமாக 22,556.45 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,245.85 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 207.40 புள்ளிகள் உயர்ந்து 22,544.70 புள்ளிகளில் நிறைவடைந்தது

    30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், இந்துஸ்தான் யுனிலிவர், அதானியின் Ports & SEZ, ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைடன், பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வை சந்தித்தன.

    டெக் மகிந்திரா, கோடக் மகிந்திரா வங்கி, சொமேட்டோ, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்இந்த் வங்கி போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    Next Story
    ×