என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
Byமாலை மலர்26 Sept 2022 3:43 PM IST
- அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
- ஊழியர்கள் பணியை புறக்கணித்து கையெழுத்து போடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை
தமிழகம் முழுவதும் மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆயிரக்கணக்கானோர் பணியை புறக்கணித்து கையெழுத்து போடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள் பஞ்சப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். வாரிய ஆணை எண்:2, 12.04.2022-யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மறுபகிர்வு முறையை கைவிட வேண்டும். வெளி ஆட்களை பணியமர்த்தக் கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தால் மின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×