search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் 10-ம் ஆண்டு விளையாட்டு விழா
    X

    வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் 10-ம் ஆண்டு விளையாட்டு விழா

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை தம்பி துரை எம்.பி., வழங்கி வாழ்த்தினார்.
    • விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வேளாங் கண்ணி பப்ளிக் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இந்த விழா விற்கு வோளங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் விஜய லட்சுமி முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு விருந்தி னராக பள்ளியின் நிறுவனர் தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, போட்டி யினை தொடங்கி வைத்து, மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசுகை யில், விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் வளர்த்துக் கொள்கின்றனர். ஒழுக்கத்திலும் தம்மை மேம்படுத்திக் கொள் வார்கள் என்றார்.

    தொடர்ந்து நடந்த 100 மீ., 200 மீ., 400 மீ தொடர் ஓட்டம், கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் தீரஜ், சாந்தி, ஆனந்த், பிரேம் ஆகிய நான்கு அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நான்கு அணிகளில் தீரஜ் அணியினர் அதிக புள்ளிகளை பெற்று 2023-ம் ஆணடிற்கான சுழற் கோப்பையை தட்டி சென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை தம்பி துரை எம்.பி., வழங்கி வாழ்த்தினார். மேலும், பெற்றோர்களுக்கு தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக பர்கூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வேளாங் கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் முதல்வர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி முதல்வர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் செய்தி ருந்தனர்.

    Next Story
    ×