என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 50 ஆயிரத்து 213 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
- மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
- மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.
அதன்படி இன்று (6-ந் தேதி) தமிழ், 10-ந் தேதி ஆங்கிலம், 13-ந் தேதி கணிதம், 17-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது .
மொத்தம் 188 தேர்வு மையங்களில் நடைபெறும் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 24, 506 ஆண்களும் 23 ஆயிரத்து 819 பெண்களும் மற்றும் 48,325 பேர் எழுதுகின்றனர்.
தனித் தேர்வாளர்கள் 23 ஆயிரத்து 78 பேர், நரம்பியல் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் 270 பேர், மத்திய புழல் சிறையில் 64 கைதிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
இந்த பொதுத் தேர்வில் 2059 அறை கண்காணிப்பாளர் மற்றும் 239 பறக்கும் படையினர் பணி ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி போன்ற டிஜிட்டல் வாட்ச், பெல்ட், ஷூ அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவர்கள் சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு உள்ளே அனுமதித்தனர்.