என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா](https://media.maalaimalar.com/h-upload/2023/05/24/1886519-mdu-07.webp)
பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- சரந்தாங்கி, ஆனையூர் உள்பட 6 இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை
தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே. செல்வகுமார் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மதுரை சரந்தாங்கி, ஆனையூரில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கிராமங்களில் அவரது உருவபடத்தை வைத்து முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
சரந்தாங்கி, ஆனையூர் உள்பட 6 இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை வி.எம்.எஸ். அழகர் தொடங்கி வைத்தார். இதேபோன்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வி.எம்.எஸ். அழகர் வழங்கினார்.
இந்த விழாக்களில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்க கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் அக்னிராஜ்,மாவட்ட செயலாளர்கள் கேசவன்,ராஜ்குமார், இளைஞரணி ஆதிமுருகன், அவைத்தலைவர் பிடாரன், மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா, மாநகர பொறுப்பாளர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் தங்கம், மதுரை மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.