என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கொரடாச்சேரியில்ரூ 14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம்-பூண்டி கலைவாணன் எம்எல்.ஏ. திறந்து வைத்தார் கொரடாச்சேரியில்ரூ 14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம்-பூண்டி கலைவாணன் எம்எல்.ஏ. திறந்து வைத்தார்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/08/1818918-6.webp)
புதிய அங்காடியினை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
கொரடாச்சேரியில்ரூ 14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம்-பூண்டி கலைவாணன் எம்எல்.ஏ. திறந்து வைத்தார்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார்.
- திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21-22 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கொரடாச்சேரி ஔவையார் நகரில் ரூ14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார்.
கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், பேரூராட்சி துணைத் தலைவர் தளபதி, பேரூராட்சி திமுக செயலாளர் கலைவேந்தன், வார்டு கவுன்சிலர் சத்தியபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரூராட்சி செயலாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். இறுதியில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் காளிதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தொடர்ந்து அங்காடி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ நட்டார்.