என் மலர்
உள்ளூர் செய்திகள்
14-வது ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 5வது கட்ட பேச்சுவார்த்தை
- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தாம்பரம்:
சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14 -வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதிதுறை கூடுதல் செயலாளார் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ். தொழிலாலர் நலத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.
தொ.மு.ச. நிர்வாகிகள் சண்முகம் நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சூரியமூர்த்தி பழனி, சி.ஐ.டி.யு. சார்பில் ஆறுமுக நைனார் சவுந்தரராஜன் எம்.எல்.எப். சார்பில் வெங்கடேசன் ஏ.எல்.எல்.எப். சார்பில் அர்ஜூனன் உட்பட பல்வேறு சங்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.