என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேனில் குட்கா கடத்திய பெங்களூரு வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்
- மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைதாகி உள்ளனர்.
- வாகனம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைதாகி உள்ளனர்.
சூளகிரி பகுதியில் பெங்களூருவை சேர்ந்த அப்சல், அப்துல்மஜீத் ஆகியோர் மினிவேனில் புகையிலை பொருட்களை கடத்திவந்த போது ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் கோமசந்திரம் பகுதியில் பிடிபட்டனர். அவர்களை சூளகிரி போலீசார் கைது செய்து வாகனம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஒடுதேபள்ளி பகுதியில் மல்லேசன் என்பவரும், சாமனூர் பகுதியில் முருகன் என்பவரும் கைதாகினர்.
பர்கூர் பகுதியில் அகமது பாஷா என்பவர் ஜெகதேவி காலம்மால் காலனியில் புகையிலை பொருட்கள் விற்ற போது சிக்கினார். பாரத கோவில் தெரு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அறியனபள்ளி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற நாகராஜ் என்பவர் வேப்பனபள்ளி போலிசால் கைது செய்யப்பட்டார். உப்பாராப்பள்ளி பகுதியில் ரமேஷ் என்பவரும், உளிவீரனப்பள்ளி பகுதியில் பர்வதம்மா என்பவரும் புகையிலை விற்ற போது தளி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.