என் மலர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 2½ பவுன் நகை பறிப்பு - வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
- முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.
- ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தை யாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து சாமி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது67). இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.
முத்தம்மாளின் 2-வது மகள் ஈஸ்வரியின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது மேற்கு பகுதி ராஜகோபால் நகரில் உள்ள ஈஸ்வரி வீட்டிற்கு முத்தம்மாள், மினி பஸ்சில் வந்து இறங்கி அங்குள்ள தியேட்டர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் திடீரென்று முத்தமாளை பிடித்து கீழே தள்ளியுள்ளனர்.
இதில் அவர் கீழே விழுந்து வலியால் அலறி துடித்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு வாலி பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து முத்தம்மாள் சிப்காட் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்தார். மேலும் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.