என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்9 Nov 2023 2:23 PM IST
- உரிய அனுமதி இல்லாமல் 16 யூனிட் கற்களை கடத்தியது அம்பலம்
- மாவட்ட புவியியல் சுங்கத்துறை வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் நடவடிக்கை
கோவை,
தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி அருகே கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரிகளில் உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு 16 யூனிட் கற்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அந்த 2 லாரி களையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர் இதுகுறித்து கேஜிசாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X