search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பர்லியார் அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லாரி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் காயம்
    X

    பர்லியார் அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லாரி விபத்து: டிரைவர் உள்பட 2 பேர் காயம்

    பர்லியார் அருகே உள்ள புதுக்காட்டு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 10 அடி பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்
    நீலகிரி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காலி அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டு இருந்தது. லாரியை ஊட்டியை சேர்ந்த சதீஷ் (வயது 21) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது ஊட்டியை சேர்ந்த ரவிசங்கர் (27) என்பவரும் உடன் வந்தார்.

    பர்லியார் அருகே உள்ள புதுக்காட்டுக்கு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 10 அடி பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.இந்த விபத்தில் லாரி டிரைவர் சதீஷ் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் ரவிசங்கரின் கையில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×