என் மலர்
செய்திகள்
X
வீட்டு வாசலில் தூங்கிய கணவன்-மனைவியை கத்தியை காட்டி மிரட்டி நகை கொள்ளை
Byமாலை மலர்6 Jun 2016 12:02 PM IST (Updated: 6 Jun 2016 12:02 PM IST)
வீட்டு வாசலில் தூங்கிய கணவன்-மனைவியை கத்தியை காட்டி மிரட்டி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பெரியபுலியூரைச் சேர்ந்தவர் ரகு.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பதிபூர்ணம்.
நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டு வாசலில் தூங்கினர். அப்போது வந்த மர்ம கும்பல் பதிபூர்ணம் அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த ரகு அவர்களை தடுக்க முயன்றார்.
உடனே மர்ம கும்பல் அவர்கள் 2 பேரையும் கத்திமுனையில் மிரட்டி பதிபூர்ணம் அணிந்து இருந்த நகையை பறித்தனர்.
இதில் நகை இரண்டு துண்டாக அறுந்தது. 4½ பவுன் நகையோடு மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×
X