என் மலர்
செய்திகள்
X
ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் தாமதம்
Byமாலை மலர்6 Jun 2016 10:20 PM IST (Updated: 6 Jun 2016 10:20 PM IST)
ராசிபுரம் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. குடிநீர் பைப் லைன் பழுதடைந்து உள்ளதால் குடிநீர் சப்ளை இராது என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம்:
ராசிபுரம் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் பைப் லைன் கண்ணந்தேரி மற்றும் மகுடஞ்சாவடி அருகே பழுதடைந்து உள்ளதால் நேற்று 5ந் தேதி குடிநீர் சப்ளை நடைபெறவில்லை.
அதேபோல் இன்று 6ந் தேதியும் ராசிபுரம் நகருக்கு குடிநீர் சப்ளை இராது என ராசிபுரம் நகர பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
X