என் மலர்
செய்திகள்
மீஞ்சூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த மேலூர் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸ் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அங்குள்ள புதரில் பதுங்கி இருந்தது. அவர்கள் போலீசை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 4 பேரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மேலூரை சேர்ந்த ஆனந்த ராஜ், பாக்கிய ராஜ், அத்திபட்டு புதுநகரை, சேர்ந்த சரத், மிஞ்சூரை சேர்ந்த ராமு என்பதும், தப்பி ஓடியவர் மேலூரை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் தெரிய வந்தது.
மேலும் இவர்கள் 5 பேர் மீது மீஞ்சூர் போலீசில் கஞ்சா, வழிபறி போன்ற வழக்குகள் உள்ளது என்றும், இவர்கள் 5 பேரும் சேர்ந்து தனியாக வரும் நபர்களிடம் வழிபறி செய்ய திட்டமிட்டு இருந்ததும் பேசாலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் 4 பேரையும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.