search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டபத்தில் 55 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
    X

    மண்டபத்தில் 55 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

    மண்டபத்தில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாட்டுப்படகில் 55 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் வனச் சரகர் கணேசலிங்கம், வனவர் மதியழகன், வனக்காப்பாளர்கள் வடமலையான், ராதா தலைமையில் வனத்துறையினர் மண்டபம் வடக்கு கடற்கரையில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது கரைக்கு வந்த நாட்டுப்படகை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.

    அதிலிருந்த 3 பேர் கடலில் குதித்து தப்பிச் சென்றனர். படகை சோதனையிட்ட போது, 55 கிலோ கடல் அட்டைகள் உள்ளே இருந்தது தெரியவந்தது. படகையும் கைப்பற்றினர். தப்பிச் சென்றவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×