என் மலர்
செய்திகள்
X
சித்தோடு அருகே ஓடும் பஸ்சில் கோர்ட்டு பெண் ஊழியரிடம் ரூ.13 ஆயிரம்-நகை அபேஸ்
Byமாலை மலர்7 Jun 2016 2:49 PM IST (Updated: 7 Jun 2016 2:49 PM IST)
சித்தோடு அருகே ஓடும் பஸ்சில் கோர்ட்டு பெண் ஊழியரிடம் ரூ.13 ஆயிரம் மற்றும் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
பவானி, தேவபுரம், செங்கோடகவுண்டர் லைன் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 55). மாதேஸ்வரி கோபி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சித்தோடு செல்வதற்காக பவானி அந்தியூர் பிரிவில் மேட்டூரிலிருந்து ஈரோடு நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார்.
பஸ் காளிங்கராயன் பாளையம் அருகே வந்த போது மாதேஸ்வரி தனது தோள் பையை திறந்து பார்த்த போது மனிபர்ஸில் இருந்த ரூ.13 ஆயிரம் பணம், 1 கிராம் காசு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி ஏ.டி.எம் கார்டு ஆகியவை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஓடும் பஸ்சில் யாரோ மர்ம நபர் மாதேஸ்வரியிடம் பணத்தை அபேஸ் செய்துள்ளான். சம்பவம் நடந்த இடம் சித்தோடு பகுதிக்கு உட்பட்டதால் இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் பஸ்சில் கோர்ட்டு பெண் ஊழியரிடம் பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×
X