என் மலர்
செய்திகள்
வேலூரில் விடிய, விடிய மழை
வேலூர்:
வேலூரில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் வெயில் தாக்கம் இருந்தது.
மாலையில் சுமார் 3-30 மணி அளவில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை பின்னர் வலுக்க தொடங்கியது. பலத்த மழையானது அவ்வப்போது சிறிது இடைவெளி விட்டு, விட்டு பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் இரவு 8-30 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து விடிய, விடிய பலத்த மழையாகவும், லேசான மழையாகவும் பெய்து கொண்டே இருந்தது. இந்த தொடர் மழையால் மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். வேலூரில் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்தது.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து 4 நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.