என் மலர்
செய்திகள்
X
மதுரையில் 2 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்23 Jun 2016 5:20 PM IST (Updated: 23 Jun 2016 5:20 PM IST)
மதுரையில் குடும்ப பிரச்சினையில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் மாயமானார்.
மதுரை:
மதுரை பழங்காநத்தம், ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி ஜோதிமணி (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் இலக்கியா என்ற குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோதிமணி, தனது குழந்தையுடன் திடீரென மாயமானார். பதட்டமடைந்த வீரமணி மனைவி, மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
X