என் மலர்
செய்திகள்
X
நெல்லையில் முட்புதரில் வீசப்பட்ட குழந்தையின் உடல்
Byமாலை மலர்23 July 2016 1:05 PM IST (Updated: 23 July 2016 1:05 PM IST)
நெல்லை கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் உள்ள முட்புதருக்குள் இன்று காலையில் ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.
நெல்லை:
நெல்லை கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் உள்ள முட்புதருக்குள் இன்று காலையில் ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் நினைவு தினத்தை முன்னிட்டு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனை கண்டனர்.
உடனடியாக அவர்கள் பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தையை புதருக்குள் வீசியது யார்? கள்ளத் தொடர்பால் பிறந்ததால் கொலை செய்து வீசப்பட்டதா? என பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X