search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
    X

    நெல்லையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

    நெல்லையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுண் பாட்டப்பத்து குமரன் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது24). சலவை தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பேச்சிவேல், சுந்தர்ராஜ் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இது தொடர்பாக நெல்லை கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு உண்டானது. இது தொடர்பான பிரச்சினையில் பேச்சிவேல், சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மாரியப்பனை ஓட ஓட விரட்டி கொலை செய்தனர். அவரது தலையை துண்டித்து குன்னத்தூர் மலையில் மறைத்து வைத்தனர். இதுபற்றி டவுண் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் தலைமையில் துணை கமிசனர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. தனிப்படை போலீ சார் பல்வேறு இடங்களுக்கு விரைந்து சென்றனர்.

    இதனிடையே கொலை யாளிகளில் ஒருவரான பேச்சிவேல் செல்போனை போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்காணித்தனர். அப்போது பேச்சிவேல் திருச்செந்தூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நெல்லையில் இருந்து தனிப்படை போலீசார் திருச்செந்தூர் சென்று பேச்சிவேலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மாரியப்பனை கொலை செய்தது குறித்து போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பேச்சிவேல் கொலை செய்யப்பட்ட மாரியப்பனின் தலையை குன்னத்தூர் மலை உச்சியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து மாரியப்பனின் தலையை மீட்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இந்த கொலை தொடர்பாக பழையபேட்டையை சேர்ந்த கவுதம், கோடீஸ்வரன்நகரை சேர்ந்த சீனிவாசன், பாட்டப் பத்து பகுதியை சேர்ந்த சிவா என்ற சண்முக சுந்தரம், ராமையா ஆகியோரை கைது செய்தார்கள்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுந்தர் ராஜை கைது செய்ய கோரியும், கொலை செய்யப் பட்ட மாரியப்பனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கேட்டும் மாரியப்பனின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரியப்பனின் உடலை வாங்க மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினார்கள்.

    இதனிடையே தலைமறை வாக இருந்த சுந்தர்ராஜை பிடிக்க தனிப்படை பல்வேறு இடங்களுக்கு சென்றது. மற்றொரு தனிப்படை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சுந்தர்ராஜின் செல்போனை கண்காணித்தனர். அப்போது சுந்தர்ராஜ் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை என்ற பகுதியில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந் தனர். இன்று காலை சுந்தர் ராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். கைதான சுந்தர்ராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘‘ எங்கள் மீதான வழக்கில் சாட்சிகளை சேகரிக் கும் பணியில் மாரியப்பன் ஈடுபட்டு வந்தார். எங்களுக்கு எதிராக சாட்சிகளை திரட்டாதே’’ என எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை.

    நாங்கள் கோர்ட்டில் ஆஜர் ஆன போது கோர்ட்டுக்கு வந்த மாரியப்பனிடம் எங் களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதால் கொலை செய்வோம் என்று மறைமுக மாக மிரட்டல் விடுத்தோம். அதற்கு அவரும் எங்களுக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் மாரியப்பனை ஓட ஓட விரட்டி வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×