என் மலர்
செய்திகள்
X
பழனியில் இன்று பெண்ணை தாக்கி 5 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்23 July 2016 3:50 PM IST (Updated: 23 July 2016 3:50 PM IST)
பழனியில் இன்று அதிகாலை நடை பயிற்சி செய்த பெண்ணை தாக்கி நகை பறிக்கப்பட்டது.
பழனி:
பழனி– திண்டுக்கல் ரோடு பழனியாண்டவர் கல்லூரி அருகே காளியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் மனைவி காளியம்மாள் (வயது 85). இன்று அதிகாலை தனது வீட்டு அருகே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காளியம்மாளை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
பழனி பகுதியில் இது போன்ற நகை பறிப்பு சம்பவம் சர்வ சாதாரணமாக நடந்து வருவது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் பயன் இல்லை என்ற நிலையில் மக்கள் உள்ளனர்.
எனவே மக்களை மிரட்டும் பைக் கொள்ளையர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
X