search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாங்குடியில் மெக்கானிக்கிடம் செல்போன் அபேஸ்
    X

    விளாங்குடியில் மெக்கானிக்கிடம் செல்போன் அபேஸ்

    நூதன முறையில் மெக்கானிக்கிடம் செல்போனை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி முல்லை நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மகன் வீரமணி (வயது26). இவர் ஜெராக்ஸ் மிஷின் மெக்கானிக்காக உள்ளார்.

    நேற்று அந்த பகுதியில் சுந்தரராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் சுந்தரராஜிடம் ஒரு போன் பேச வேண்டும் என செல்போனை கேட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து சுந்தரராஜ் தனது செல்போனை கொடுத்துள்ளார். அதனை வாங்கி பேசிய அந்த நபர், அப்படியே நடந்து செல்போனோடு மாயமாகி விட்டார். சிறிது நேரம் கழித்து அவரை தேடிய சுந்தரராஜ் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், செல்போனின் மதிப்பு ரூ.8 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை அபேஸ் செய்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×