என் மலர்
செய்திகள்
X
அரசின் உதவித்தொகை பெற வங்கி கணக்கு தொடங்க வேண்டும்: கலெக்டர் வலியுறுத்தல்
Byமாலை மலர்23 July 2016 6:09 PM IST (Updated: 23 July 2016 9:54 PM IST)
அரசின் உதவித்தொகை பெற அருகில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் வலியுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளை சேர்ந்த முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள் பெற்று வரும் பயனாளிகள் உதவித் தொகை பெற அருகில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும்.
தங்கள் பகுதியில் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்கி அதன் புத்தகத்தின் நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் தொலைபேசி எண்ணுடன் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய சமூக பாதுகாப்பு தாசில்தார் அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் வரும் 31–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) க்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X