search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் நாளை முதல் வேலை நிறுத்தம்
    X

    பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் நாளை முதல் வேலை நிறுத்தம்

    பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழிற்சாலைகள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், சமத்தூர், ஆனைமலை பகுதிகளில் மட்டும் 500 நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் சுமார் 4 லட்சம் பேர் நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தியாகும் நார் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

    இந்த நிலையில் நாளை முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை வேலை நிறுத்தம் செய்ய போவதாக கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் துணை தலைவர் சுதாகர், செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    தென்னை நாருக்கு குறைந்தபட்ச விலை கூட கிடைப்பதில்லை. இறக்கு மதியாளர்கள் விலையை குறைத்து விட்டனர். உற்பத்தி செலவினங்கள் அதிகரித்து வருவதால் நார் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலை தொடர்ந்தால் தொழிலில் நெருக்கடி ஏற்படும். ஆகவே நாளை (27-ந் தேதி) முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை உற்பத்தியை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×