என் மலர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அகதிகள்: நாகர்.ஜெயிலில் அடைக்கப்பட்ட 14 பேரும் கோர்ட்டில் ஆஜர்
Byமாலை மலர்26 July 2016 12:58 PM IST (Updated: 26 July 2016 12:58 PM IST)
ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்று கைதான அகதிகள் 14 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் இருந்து அழைத்து செல்லப்பட்டு இரணியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த அகதிகள் பலர் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பி செல்ல முயன்றனர்.
இது பற்றிய ரகசிய தகவல் குமரி மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. அவர்கள் படகில் தப்பி செல்ல திட்டமிட்ட ஷோபனா என்ற பெண் உள்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு ஷோபனா மட்டும் சென்னை புழல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 14 பேரும் நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது இந்தியாவில் இருந்து அகதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப மூளையாக இருந்து செயல்பட்டது மாறன் என்ற அகதி என தெரியவந்தது. அவர் ஏற்கனவே இன்னொரு வழக்கில் கைதாகி சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் கியூ பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாறனை சென்னை ஜெயிலில் இருந்து போலீசார் 2 நாள் காவலில் எடுத்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். இங்கு அவரிடம் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப நடந்த முயற்சி பற்றியும் இது போல அகதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவங்கள் நடந்து உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாறனின் 2 நாள் காவல் முடிவடைந்ததும் அவரை போலீசார் மீண்டும் சென்னை கொண்டு சென்று ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கைதாகி நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் மீதான வழக்கு இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு இன்று இரணியல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்காக நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்ட 14 பேரும் இன்று இரணியல் அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை புழல் ஜெயிலில் அடைக்கபட்ட ஷோபனா மட்டும் இன்று கோர்ட்டுக்கு அழைத்து வரப்படவில்லை.

Next Story
×
X