என் மலர்
செய்திகள்
X
மணவாளக்குறிச்சி அருகே பலியான கணவன்-மனைவி உடல் இன்று பிரேத பரிசோதனை
Byமாலை மலர்26 July 2016 1:17 PM IST (Updated: 26 July 2016 1:17 PM IST)
மணவாளக்குறிச்சி அருகே பலியான கணவன்-மனைவி உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டிணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் அமல பிரிப்போ போஸ் (வயது 31) மீனவர். இவரது மனைவி ஜாஸ்மின்டிசோலா பெல்ஸ் (27).
இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக அமலபிரிப்போபோஸ் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வேலைக்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் ஜாஸ்மின்டிசோலா பெல்சின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் கணவன், மனைவி இருவரும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. வீட்டில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அமலபிரிப்போபோஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும் ஜாஸ்மின்டிசோலா பெல்ஸ் தரையிலும் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜாஸ்மின் டிசோலா பெல்லின் கழுத்துப்பகுதியில் காயம் இருந்தாக கூறப்படுகிறது. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்ற விவரம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும்.
இந்த சம்பவம் குறித்து சகாயராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலபிரிப்போ போஸ் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜாஸ்மின்டிசோலா பெல் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பலியான அமலபிரிப்போபோஸ், ஜாஸ்மின்டிசோலா பெல்லின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
ஜாஸ்மின்டிசோலா பெல்லிற்கு திருமணமாகி 4 வருடமே ஆவதால் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ஸ்ரேயாசிங் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Next Story
×
X