search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே காதல் திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் தற்கொலை
    X

    கோபி அருகே காதல் திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் தற்கொலை

    கோபி அருகே காதல் திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    கோபி வாஸ்துநகரை சேர்ந்தவர் தாமோதரன் இவரது மகன் கோகுல் (25) பி.காம் பட்டதாரி. இவரும் அனுஷா (22) என்ற இளம்பெண்ணும் கடந்த 6 மாதத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அனுஷா பி.பி.எம் படித்துள்ளார். கோகுல் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    காதல் தம்பதியினர் சந்தோசமாக வாழ்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்களிடடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்தது. இதனால் கோகுல் மன வருத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோகுல் திடீரென தூக்கில் தொங்கினார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அதன் பிறகு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக கோகுல் இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×