என் மலர்
செய்திகள்
பெண் என்ஜினீயர் தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியதாக சமையல்காரர் கைது
ஈரோடு:
ஈரோடு பெரிய வலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி தேன்மொழி (வயது 32). இவர் பி. டெக். படித்துள்ளார்.
கணவர் மாதேஸ்வரன் துபாயில் ஒரு ஆயில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5½ ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை.
தேன்மொழி சில தினங்களுக்கு முன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதன்பிறகு தேன்மொழியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தேன்மொழியின் தந்தை சின்னப்பன் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்த பஷீர் சேட் (வயது 31). சமையல்காரர். இவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இவர் தேன்மொழியை தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தது.
அதன் பேரில் போலீசார் பஷீரை இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.