search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே மணல் கடத்தலை தடுக்க அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
    X

    திருவள்ளூர் அருகே மணல் கடத்தலை தடுக்க அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல முயற்சி

    திருவள்ளூர் அருகே மணல் கடத்தலை தடுக்க அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பெரியமுல்லைவாயில் பகுதியில் லாரியில் மணல் கடத்தப்படுவதாக கலெக்டர் சுந்தரவள்ளிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கனிமவள வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பெரியமுல்லை வாயிலில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மணல் ஏற்றிய லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் தியாகராஜன் மீது மோதுவது போல் சென்றார். இதையடுத்து லாரியை அதிகாரிகள் விரட்டி சென்று மீஞ்சூரில் மடக்கி பிடித்தனர். உடனே லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மணல் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து அதிகாலை தியாகராஜன் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மீது லாரியை ஏற்ற முயன்றதாக கூறி உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து லாரியின் எண்ணை வைத்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×