என் மலர்
செய்திகள்
X
கொடைக்கானலில் பஸ் நிலையத்துக்குள் புகுந்த காட்டெருமைகள்
Byமாலை மலர்6 Sept 2016 1:47 PM IST (Updated: 6 Sept 2016 1:48 PM IST)
கொடைக்கானல் பஸ் நிலையத்துக்குள் புகுந்த காட்டெருமை முட்டி தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் அடிக்கடி மக்கள் நடமாடும் பகுதிகளில் காட்டெருமைகள் புகுந்து மிரட்டி வருகின்றன. இதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் விரட்டினாலும் மீண்டும் அதே பகுதிக்கு வந்து விடுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி வளாகத்திலும், பஸ் நிலையம் அருகிலும், ஏரிச்சாலையிலும் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்து அப்பகுதி மக்களை மிரட்டியது.
நேற்று இரவு கொடைக்கானல் பஸ் நிலையத்துக்குள் 6 காட்டெருமைகள் ஒரே நேரத்தில் புகுந்தன. இதை பார்த்ததும் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.
அப்போது பேத்துப்பாறையை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது40) தனது மோட்டார் சைக்கிளில் செண்பகனூர் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அவரை காட்டெருமை முட்டி தள்ளியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கொடைக்கானலில் அனைத்து பகுதிகளிலும் தற்போது காட்டெருமைகள் சர்வசாதாரணமாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருவது பொதுமக்களை பீதி அடைய வைத்துள்ளது.

Next Story
×
X